உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்டோ தொழிலாளர்கள் இன்று உண்ணாவிரதம்

ஆட்டோ தொழிலாளர்கள் இன்று உண்ணாவிரதம்

சென்னை: தமிழகத்தில், புதிய அரசு அமைந்து, 100 நாட்களை கடந்த பின்னரும், ஆட்டோ தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையான, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைப்பதில், தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆட்டோ, கால்டாக்ஸி உள்ளிட்ட, லட்சக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்குத் தீர்வு கோரி, இன்று அனைத்து ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம் என, உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் செயல் தலைவர் ஜாஹிர் ஹுசைன் அறிவித்துள்ளார். வரும் 27ம் தேதி, சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ