தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் விருது
மதுரை: தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த 6 பேருக்கு சேவா ரத்னா விருதுகளை தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.மதுரையில், ஸ்ரீ ராதா மாதவர் திருக்கல்யாண வைபவம் மற்றும் பாகவத மேளா கடந்த 3 நாட்களாக மதுரை எஸ்.எஸ்.காலனி பிராமண கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் மாநிலத் தலைவர் பழனி ஹரிஹர முத்தையர் தலைமை தாங்கினார். நிகழ்வில் ஆய்க்குடி குமார் பாகவதரின் , ஸ்ரீ ராதா மாதவர் கல்யாண உற்சவம், ஆஞ்சநேயர் உற்சவம், மகா தீபாராதனைகள் நடந்தன.நிகழ்வில் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் ஆன்மிகம், வைதீகம், கலை, சமூகத் தொண்டுகளில் சிறப்புற சேவை செய்த பாகவதர் ஆய்க்குடி குமார், மதுரை மாநகர வைதிக சமாஜம் தலைவர் ஸ்ரீதர் வாத்யார் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவன நெல்லை பாலு, ஆன்மிக எழுத்தாளர் மு.ஆதவன், சமையல்கலை நிபுணர் கிருஷ்ணமூர்த்தி நாதஸ்வர வித்துவான் பரவை பஞ்சாபகேசன் ஆகிய 6 பேருக்கு சேவா ரத்னா விருதுகள் வழங்கி கவுரவித்தார்.முன்னாள் எம்எல்ஏ தமிழரசன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புதூர் ராமகிருஷ்ணன்,பிராமண கல்யாண மண்டபம் தலைவர் சங்கர நாராயணன் அம்மா கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ண ஐயர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். பிராமண சமாஜ மதுரை மாவட்ட தலைவர் ரவி, செயலாளர் ஸ்ரீ ராமன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.