உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 396 ஆசிரியர்களுக்கு விருது

396 ஆசிரியர்களுக்கு விருது

சென்னை:''மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் சிலை, திருவள்ளூரில் நிறுவப்படும்,'' என துணை முதல்வர் உதயநிதி கூறினார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று ஆசிரியர் தின விழா நடந்தது. விழாவில், துணை முதல்வர் உதயநிதி, 2,810 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளையும் வழங்கினார். அவர் பேசுகையில், ''டாக்டர், இன்ஜினியர், அரசியல்வாதி உள்ளிட்டோரை உருவாக்கும் ஆசிரியர்களாகிய உங்களுக்கு, அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் பொறுப்பு உள்ளது. ''எனவே, மாணவர் களின் ஆரோக்கியத்துக்காக, அவர்களை விளையாடவும் அனுமதிக்க வேண்டும். மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் சிலை திருவள்ளூரில் நிறுவப்படும்,'' என்றார். அமைச்சர் மகேஷ் பேசுகையில், ''அதிக தேர்ச்சியை அளித்துள்ள பொறுப்புள்ள ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். தற்போது நாட்டில் உள்ள ஆசிரியர்களை அச்சுறுத்தும், 'டெட்' தேர்வு குறித்து, முதல்வர் நல்ல முடிவெடுப்பார்,'' என்றார். விழாவில், அமைச்சர்கள் சேகர்பாபு, சுப்பிர மணியன், சென்னை மாநகர மேயர் பிரியா, பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன், இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ், தனியார் பள்ளிகள் இயக்குநர் குப்புசாமி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ