உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் தடை இழப்பீட்டுக்கு கெடு

மின் தடை இழப்பீட்டுக்கு கெடு

சென்னை : மின் தடை இழப்பீட்டுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதிகளை ஏற்படுத்தியுள்ளது. நகரங்களில் உயரழுத்த மின் இணைப்பில் மாதம், 600 நிமிடங்களுக்கு மேல் மின் தடை ஏற்பட்டால், ஒவ்வொரு நிமிடத்துக்கும், 5 காசு; கிராமங்களில், 1,200 நிமிடங்களுக்கு மேல் ஒவ்வொரு நிமிடத்துக்கு, 5 காசு இழப்பீடு வழங்க வேண்டும். நகரங்களில் மாதம், 15 முறைக்கு மேல் மின் தடை ஏற்படும்போது, ஒவ்வொரு முறை மின் தடை ஏற்படுவதற்கும், 50 காசும்; கிராமங்களில், 25 முறைக்கு மேல் மின் தடை ஏற்படும்போது, ஒவ்வொரு முறைக்கும், 50 காசும் இழப்பீடு வழங்க வேண்டும்.இழப்பீடு கொடுப்பதற்கான அவகாசம் கடந்த ஆகஸ்ட்டில் முடிவடைந்த நிலையில் தற்போது வரும் பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ