உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமின் கோரி மனு: நாளை விசாரணை

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமின் கோரி மனு: நாளை விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ரூ.100 கோடி நிலமோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன்ஜாமின் கோரி அவரது சகோதரர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நாளை (ஜூலை 16) உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வருகிறது.ரூ.100 கோடி நிலமோசடி புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏழு பேர் மீது கரூர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த இரண்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்த நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன் ஜாமின் கோரி, அவரது சகோதரர் எம்.ஆர்.சேகர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நாளை (ஜூலை 16) விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ