பக்ரீத் ஸ்பெஷல்: தியாகத்திருநாள் வந்ததே
தியாகத்திருநாள் வந்திடவே சிறுவன் மகிழ்ந்தான்புத்தாடை அணிந்து பள்ளிவாசல் சென்றான்.ஏழைச்சிறுவனை வழியில் கண்டான்கிழிந்த ஆடையுடன் வாடிய முகத்துடன்.சிறுவன் மனமிரங்கி அவனைப் பார்த்தான்தனதுபுது மேலாடையை மகிழ்ச்சியாய் தந்தான்.ஏழைச்சிறுவன் கண் கலங்கிட நன்றி சொன்னான்நட்பு மலரவே இருவரும் கைகோர்த்துநடந்தனர்.பள்ளிவாசல் எங்கும் மக்கள் கூட்டம்ஏக இறைவனின் புகழ்பாட அறிஞர் நாட்டம்.இப்ராஹிம் நபி கண்ட கனவில் ஆழம்இஸ்மாயில் நபியை அர்ப்பணிக்கத் துணிந்த வேகம்.நம்பிக்கையின் வலிமை இறைவனின் கருணைசைத்தானின் சூழ்ச்சியை வென்ற உண்மை.இறையருளால் ஆடு குர்பானியாய் வந்ததுதியாகத்தின் பெருமையோ உலகில் நிலைத்தது.சகோதரத்துவத்தை ஓங்கி உரக்கச் சொல்லும்மகிழ்ச்சியும் அமைதியும் என்றும் நிலைக்கும்.தியாகத் திருநாளில்நாமெல்லாம் ஒன்றாவோம்அன்புடன் அமைதியுடன் எந்நாளும் வாழ்வோம்.- நி.அமிருதீன் ஹசனி