உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான தடை நீக்கம்

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான தடை நீக்கம்

மதுரை : 'தென்காசி, காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த விதித்த தடையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தென்காசி நம்பிராஜன் தாக்கல் செய்த மனு:தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில், நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. கோவில் ராஜகோபுரத்தில் பழுது சரி செய்யப்படவில்லை. இதனால், கோவிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடியும் வரை, கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க வேண்டும். கோவில் புனரமைப்பு பணிகளின், தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய, வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும். கோவில் புனரமைப்பு பணிக்கு, அரசு வழங்கிய நிதியில், மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கஉத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு, நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, கும்பாபிஷேகத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். தடையை நீக்கக்கோரி, அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதிகள் நேற்று விசாரித்தனர்.ராஜகோபுரம் உட்பட கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்துள்ளன. கணபதி ஹோமம் நடந்து முடிந்துள்ள நிலையில், கும்பாபிஷேகத்தை நிறுத்துவது சரியல்ல என, அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையேற்று கும்பாபிஷேகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ