உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தக் லைப் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை

தக் லைப் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை

சென்னை: இன்று வெளியாகும் தக் லைப் படத்தை, சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிலம்பரசன் மற்றும் திரிஷா நடித்துள்ள, தக் லைப் படம், இன்று வெளியாகிறது. இப்படத்தை, சட்ட விரோதமாக வெளியிட, இணையதளங்கள், 'கேபிள் டிவி' நிறுவனங்களுக்கு தடை விதிக்க கோரி, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இந்த மனு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, ''சென்னை உட்பட உலகம் முழுதும், 3,500 தியேட்டர்களில் இன்று படம் வெளியாகிறது. அதிக பொருட்செலவில் படம் தயாரிக்கப்பட்டு உள்ளதால், சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியானால், பட தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான, 793 இணையதளங்கள் மற்றும் 'கேபிள் டிவி' ஆகியவற்றில், சட்டவிரோதமாக படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.இதை ஏற்ற நீதிபதி, படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், சட்டவிரோதமாக வெளியாவதை தடுப்பதற்குரிய நடவடிக்கையை, இணையதள சேவை நிறுவனங்கள் எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 05, 2025 07:07

மக்கள் உயிருக்கு பயந்து தக் லைப் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை செய்து விட்டார்கள் ..இந்த படம் நிச்சயம் ஓடாது .. பொதுமக்களுக்கு இம்சைதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை