மேலும் செய்திகள்
பழநியில் குவிந்த பக்தர்கள்
25-Nov-2024
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் தங்கும் விடுதியில் சானிடைசர் வைத்திருந்த பேரல் வெடித்ததில் துாய்மைப்பணியாளர்கள் இருவர் பலத்த காயமடைந்தனர். கேரள பக்தர்கள் வந்த காரும் தீப்பற்றி எரிந்தது.பழநி முருகன் கோயில் வரும் பக்தர்கள் வசதியாக கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தண்டபாணி நிலையத்தில் பல்வேறு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. நேற்று காலை 9:00 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அபின் சங்கர் குடும்பத்தினர் அறை எடுத்து தங்கினர். இவர்களது கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடம் அருகே சனிடைசர் பேரல்களை தற்காலிக துாய்மைப்பணியாளர்களான பழநி ஜவகர் நகரை சேர்ந்த முருகன் 50, ராமநாத நகரை சேர்ந்த பிச்சான் 55 , எடுத்து வந்தனர்.அப்போது சனிடைசர் பேரல் ஒன்று வெடித்து தீப் பற்றியது. அருகில் இருந்த பேரல்களிலும் தீப்பற்றி வெடித்தது. இதன் தீ கேரள பக்தர்கள் வந்த காரில் பற்றியது. பழநி தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர். கார் முற்றிலும் எரிந்தது. துாய்மைப் பணியாளர்கள் இருவரும் பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பழநி அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Nov-2024