உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராயம் சம்பவத்தில் பா.ஜ., அ.தி.மு.க.,வுக்கு தொடர்பு: தி.மு.க., குற்றச்சாட்டு

கள்ளச்சாராயம் சம்பவத்தில் பா.ஜ., அ.தி.மு.க.,வுக்கு தொடர்பு: தி.மு.க., குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கள்ளச்சாராயம் சம்பவத்தில் பா.ஜ., அ.தி.மு.க.,வுக்கு தொடர்பு உள்ளது' என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் அரசு தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக போராட வேண்டாம். கள்ளக்குறிச்சி சம்பவம் யாரும் எதிர்பாராத ஒன்று, வருத்தப்பட வேண்டிய ஒன்று என முதல்வர் ஏற்கனவே கூறியுள்ளார். கள்ளச்சாராயம் சம்பவத்தில் பா.ஜ., அ.தி.மு.க.,வுக்கு தொடர்பு உள்ளது.

அரசியல் ஆதாயம்

கள்ளச்சாராய விவகாரத்தில் அதிமுக., மற்றும் பா.ஜ.,வை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் பற்றிய உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. சட்டசபையில் விவாதிக்கலாம் என முதல்வர் கூறியிருக்கிறார்; ஆனால் அதிமுக.,வினர் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இ.பி.எஸ் விவாதிக்க தயாராக இல்லை; நாடகமாடுகிறார். முழு உண்மை தெரியவரும் முன்பே அரசியல் ஆதாயத்திற்காக அதிமுக, பா.ஜ.,வினர் போராட்டம் நடத்துகின்றனர்.

உண்மை வெளியே வரும்

கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது, சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது; உண்மைகள் வெளியே வரும். எம்ஜிஆர் ஆட்சி காலத்திலேயே கள்ளச்சாராய விற்பனை இருந்தது. மதுவிலக்கு அமலில் இருந்ததால் தமிழகத்தில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் குறித்து ஆய்வு செய்தே மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. கள்ளச்சாராயத்தின் வரலாறை பற்றி தெரிந்து கொண்டு நிர்மலா சீதாராமன் பேச வேண்டும்.

சிபிஐ விசாரணை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தை திசைத் திருப்பவே சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கேட்கின்றனர். 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற்றதை பொறுக்க முடியாதவர்கள் இவ்விவகாரத்தை பூதாகாரமாக்குகின்றனர். கள்ளச்சாராய மரணத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் இபிஎஸ், நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை கோரியது ஏன்? தமக்கு எதிரான வழக்கில் முன்பு சிபிஐ மீது நம்பிக்கையில்லாத இபிஎஸ்.,க்கு இப்போது சிபிஐ மீது இப்போது நம்பிக்கை வந்தது எப்படி? பா.ஜ., ஆளும் உ.பி., குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்டது. அப்போது பா.ஜ.,வினர் ஏன் சிபிஐ விசாரணை கோரவில்லை? காவல்துறை அமைச்சராக இருந்த இ.பி.எஸ்., தமிழக போலீஸை இழிவுப்படுத்துகிறார். விக்கிரவாண்டி தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி விவகாரத்தை அதிமுக, பா.ஜ.,வினர் பெரிதுப்படுத்துகின்றனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வர் பதவி விலக வேண்டும் என சொல்வது மனசாட்சி அற்ற செயல். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 81 )

sundarsvpr
ஜூலை 23, 2024 14:00

கள்ள சாராயம் குடித்து செத்து ஒழிந்தவரின் குடும்பத்திற்கு பத்து லட்சம் வழங்கியதை தி மு க அரசின் சாதனை என்று கூற தயங்குவது ஏன்?


vsperumal
ஜூலை 22, 2024 20:09

தமிழகத்தை ஆள்வது பிஜேபியா அல்லது திமுக வா. ஆட்சியும் அதிகாரத்தில் இருந்து கொண்டு. ஆட்சி நிர்வாகம் செய்ய தெரியாத இவர்கள். சொல்லும் சப்பைக்கட்டு பொய் புளுகுதல.


venkatakrishna
ஜூன் 27, 2024 14:28

மக்களின் மனதை திசை திருப்ப என்ன வேண்டுமானாலும் கூறுவார். அத்துடன் தளபதியிடம் தான் இருக்கிறோம் என்பதை உணர்த்தவும் இதுபோன்று கதைகளை கூறுவார். இவருக்கு முழு அண்ணாயிசமும் தெரியும்.


SIVA
ஜூன் 27, 2024 08:45

உங்க திருட்டு வடை மாடல் ஆட்சியில் மூன்று ஆண்டுகள் சாராயம் அவர்கள் காய்ச்சுகின்றார்கள் என்றால் உங்களை போல் உங்கள் திருட்டு வடை மாடல் ஆட்சியும் டம்மி தானா , இல்லை சும்மா மிச்சர் சாப்பிடுவது மட்டும் தான .....


Bala Paddy
ஜூன் 27, 2024 08:05

இவானா தூக்கி குண்டாஸ் ல போடணும்.


Pandi Muni
ஜூன் 26, 2024 19:51

இந்த கிறுக்கு பயல கட்டிப்போட்டு வைங்க திராவிடன்களா


Balaji Gopalan
ஜூன் 26, 2024 11:35

இதுக்கு தான் உங்களை சவுக்கு அவர்கள் அறிவாலய watchman என்று சொல்லுவார்.. உனக்கு அறிவு இல்லை என்பதை அடிக்கடி நிரூபித்து கொண்டே இருங்க


karutthu
ஜூன் 26, 2024 09:24

இந்த ஆர் எஸ் பாரதி பேச்சால் தி மு க விற்கு கெட்ட பெயர் தான் கிடைக்கும் .மக்கள் கோபத்தின் உச்சியில் உள்ளனர் .ஆகவே தி மு க தலைவர் M.K.Stalin அவரை கொஞ்சம் நாள் பேசாமல் இருக்கச்சொல்லுங்கள் .


DHANASEKARAN DEVAN
ஜூன் 25, 2024 20:14

அப்போ ஏன் அவர்களை சம்பவம் நடக்கும் முன் கைது செய்யவில்லை?


DHANASEKARAN DEVAN
ஜூன் 25, 2024 20:14

அப்போ ஏன் அவர்களை சம்பவம் நடக்கும் முன் கைது செய்யவில்லை?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை