உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறந்த பிரதமர் மோடி செங்கோட்டையன் பாராட்டு

சிறந்த பிரதமர் மோடி செங்கோட்டையன் பாராட்டு

சென்னை:''இக்கட்டான சூழலில் இருக்கிறேன். சில வேடிக்கை மனிதர்களை போல வீழ்ந்து விட மாட்டேன்,'' என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.'சாணக்கியா' - யு டியூப் சேனலின், 6வது ஆண்டு விழா, அதன் நிறுவனர் ரங்கராஜ் பாண்டே தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது. அதில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:இக்கட்டான சூழலில் இருக்கிறேன் என்பதை, உங்களால் உணர முடியும்; காலத்தின் சூழ்நிலை. சீமான் பேசுவதைப் போல நான் பேச முடியாது. அவர் எதை வேண்டுமானாலும் பேசலாம். நான் அளந்து பேச வேண்டிய நிலை உள்ளது.சுற்றுச்சூழலை பாதிக்கிற வகையில், சாயப்பட்டறைகள் வருகின்றன. அவற்றை தடுக்க வேண்டும் என, 200க்கும் மேற்பட்டோர் என்னிடம் மனு அளித்தனர். மனுவை பெற்று, சபாநாயகரிடம் சென்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக சென்றேன். அதுவே, பெரிய செய்தியாக மாறியுள்ளது. ஒரு எம்.எல்.ஏ., சபாநாயகரை சந்திப்பது சாதாரணமான ஒன்று. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சிறந்த ஆற்றல்மிக்க தலைவர்கள். இந்தியாவில் சிறந்த பிரதமராக மோடி இருக்கிறார்; நல்லதை பாராட்டுவேன். நான் என்ன செய்யப் போகிறேன் என, அனைவரும் கூர்ந்து கவனிக்கின்றனர். நான் எதுவும் செய்யப் போவது இல்லை. ஏனென்றால், எந்த பாதை சரியாக இருக்கிறதோ, அந்த பாதையில் நான் சென்று கொண்டிருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது; வெற்றி முடிவானது. சில வேடிக்கை மனிதர்களை போல் நான் வீழ்ந்து விட மாட்டேன்.இவ்வாறு அவர் பேசினார்.நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ''நான் சினிமாவை பார்த்து, ஈ.வெ.ரா., பற்றி பேசவில்லை; படித்ததை பேசுகிறேன். இதற்கு முன் தவறுகள், பத்திரிகைகளில் வந்து விடப்போகிறது என, அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் பயப்படுவர். தற்போது அனைவருக்கும் தெரிந்தே தவறு நடக்கிறது. இதற்கு அரசியல் மாற்றம் வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

pmsamy
மார் 16, 2025 08:33

பாஜகவின் வாஷிங் மெஷின் க்கு செங்கோட்டையன் சென்றது ஏன்


மணி
மார் 16, 2025 04:24

தவால் உறுதி.பி.சே.பி பக்கம் இவன் எல்லாமா M.GR விசுவாசி


புதிய வீடியோ