உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மஞ்சள் நிறத்துக்கு மாறிய பவானி ஆறு; குடிநீராக பயன்படுத்தும் மக்கள் அச்சம்

மஞ்சள் நிறத்துக்கு மாறிய பவானி ஆறு; குடிநீராக பயன்படுத்தும் மக்கள் அச்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம், சிறுமுகை அருகே பவானி ஆறு மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. இந்த தண்ணீரை குடிநீராக வழங்குவதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.சிறுமுகை அருகே உள்ள மூளையூரில் பவானி ஆற்றில் இருந்து, காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னகள்ளிப்பட்டி, முடுதுறை, இரும்பொறை, இலுப்பநத்தம், பெள்ளேபாளையம், ஜடையம்பாளையம் ஆகிய ஆறு ஊராட்சிகளின் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.கடந்த மாதம் சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு பழையூரில் இருந்து, சிறுமுகை ராமர் கோவில் வரை, பவானி ஆற்றுத் தண்ணீர் கருப்பு நிறமாக மாறி இருந்தது. ரசாயன சாயக் கழிவு நீரால், ஆற்றுத் தண்ணீர் மாசு அடைந்துள்ளது என, ஆய்வு செய்த மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சிறுமுகை விஸ்கோஸ் பம்பு ஹவுசில் இருந்து, மூளையூர் வரை பவானி ஆற்றுத் தண்ணீர் மேல் பகுதியில் மஞ்சள் நிறத்தில் குப்பை போன்ற துகள்கள் படிந்துள்ளன. இந்த தண்ணீரை குடிநீர் வடிகால் வாரியம் எடுத்து, சம்பரவள்ளி அருகே கோவில் மேட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில், சுத்தம் செய்து ஆறு ஊராட்சிகளுக்கு குடிநீராக வழங்கி வருகிறது. இந்த தண்ணீரை குடித்தால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பவானி ஆற்றுத் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதை அறிந்து, கோவை மற்றும் திருப்பூரைச் சேர்ந்த மாசு கட்டுப்பாடு வாரிய பறக்கும் படை அதிகாரிகள் சிபிசக்கரவர்த்தி, கதிர்வேல், லாவண்யா ஆகியோர் சிறுமுகை அருகே பவானி ஆற்றை ஆய்வு செய்தனர். பின்னர், பரிசோதனைக்கு தண்ணீரை எடுத்துச் சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sankare Eswar
மார் 29, 2025 06:33

நாடும் நாட்டுமக்களும் நாசமாய் போக கூடாது... அரசியல் வியாதிகள் மற்றும் அவர்களது தலைமுறை குட்டிகள் குணப்படுத்தமுடியாத புரியாத கொடூர நோய் வந்து மகிழ்ச்சியாய் வாழ வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
மார் 29, 2025 05:39

கடைசி வரை அந்த சாய ஆலையை யாரும் தொடக்கூட முடியாது போல ? ஆனைக்காரணசத்திரம் , கொள்ளிடம் என்ற ஊரில் இரு கால்வாய்களை முற்றிலும் நாசப்படுத்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் போலவே இங்கும் சில பெரிய அரசியல்வாதிகள் இருப்பார்களோ ?


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
மார் 29, 2025 04:33

வரலாற்றில் எந்த ஒரு மன்னராட்சியும் இரண்டு தலைமுறைக்கு மேல் நீடித்தது இல்லை அதே போல் திமுக அழியும் காலம் நெருங்கி விட்டது கருணாநிதி என்ற மன்னருக்கு பின் அவரது மகன் இளவரசர் ஸ்டாலின் இவரோடு திமுக அழிவதை யார் தடுத்தாலும் நிறுத்த முடியாது அது அழிய வேண்டியது காலத்தின் கட்டாயம்.உதயநிதி எல்லாம் முதலமைச்சர் ஆவதை போலி ஆத்திகவாதியான அவரது அம்மா துர்கா கனவில் வேண்டுமானால் கண்டு கொள்ளலாம்.


முக்கிய வீடியோ