பறவை காய்ச்சல் பாதிப்பு; 14 மாவட்டங்களில் பரவல்
சென்னை : தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு, 14 மாவட்டங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை அடையாறில், ஜன., 5ம் தேதி காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இறந்த காகங்களின் உடலை ஆய்வு செய்த மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், பறவை காய்ச்சலால் காகங்கள் இறந்ததை உறுதி செய்தது. மேலும், தடுப்பு நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அரசுக்கு உத்தரவிட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ir3juuhl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையே, சென்னையை தொடர்ந்து, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலுார் உள்ளிட்ட 14 மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்திலும் காகங்கள் உயிரிழந்து வருகின்றன. இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 14 மாவட்டங்களில் பறவை காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்தாலும், மற்ற பறவைகளுக்கோ, மனிதர்களுக்கோ பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதேநேரம், காகங்கள் உயிரிழப்பது தொடர்ந்து வருவதால், பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். உயிரிழக்கும் பறவைகளை வெறும் கையால் தொட்டு அப்புறப்படுத்தக் கூடாது. அதேபோல், காய்ச்சல் இருந்தால் அலட்சியம் காட்டாமல் உரிய சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்பாதீர்
தமிழகத்தில் குளிர்காலத்தில் இருந்து கோடை பருவம் துவங்கும்போது, சின்னம்மை பரவல் அதிகரிக்கிறது. சின்னம்மை நோய் மற்றும் காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, பள்ளிகளுக்கு அனுப்பக் கூடாது. அந்த குழந்தைகள் வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும். வெயில் தாக்கம் அதிகரிக்கும்போது, இந்நோய் பரவலை தடுக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. -- அமைச்சர் சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வு துறை ***