உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே அணியில் பா.ஜ., - தி.மு.க.,: சீமான் குற்றச்சாட்டு

ஒரே அணியில் பா.ஜ., - தி.மு.க.,: சீமான் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இயற்கைக்கு எதிரான முதலாளித்துவ கோட்பாட்டில் பா.ஜ.,வும், தி.மு.க.,வும் ஒரே அணியாய் நிற்கின்றன' என நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நீலகிரி மாவட்டம் சில்லகல்லா நீரேற்று மின் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இவை அடர்ந்த காடுகள், 800 ஏக்கர் நிலத்தை மூழ்கடிக்கிறது. இத்திட்டப்பகுதி முக்கூர்த்தி தேசிய பூங்கா, முதுமலை - மூக்கூர்த்தி புலிகள் வழித்தடம் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகே உள்ளது. பெரிய அணைகள், சுரங்கப் பாதை அமைப்பது நில அதிர்வுகளையும், நிலச் சரிவையும் ஏற்படுத்தலாம். மேலும் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் வீடுகளை இழக்க நேரிடும்.இதன் ஆபத்தை உணர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்துவதை அரசு கைவிட வேண்டும். இது போன்ற அழிவு திட்டத்தை மக்கள் மீதும் இயற்கை மீதும் திணிக்க முற்படும் தி.மு.க., அரசு மேடைகளில் பருவநிலை மாற்றம் குறித்து பேசினால் எல்லாம் மாறிவிடுமா. மத்திய பா.ஜ., அரசு கொண்டு வரக்கூடிய அழிவு திட்டங்களுக்கு அனுமதி வழங்கி துணையாய் செயல்பட்டு வருவதன் வழியே பா.ஜ.,வும், தி.மு.க.,வும் இயற்கைக்கு எதிரான முதலாளித்துவ கோட்பாட்டில் ஒரே அணியாய் நிற்கின்றன. எனவே சில்லகல்லா புனல் மின்சார திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Subburamu Krishnasamy
மார் 20, 2025 19:47

Directionless political outfits, not at all useful to the society. Parties d by individuals, heroworship, caste, religion, community based political outfits are destroying the democracy


Madras Madra
மார் 20, 2025 12:22

ஆட்சி நிர்வாகம் எது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் சீமான் அரசியல் வேறு


Sampath Kumar
மார் 20, 2025 08:46

அது எல்லாமேன்களுக்கு தெரியாது எங்களுக்கு துட்டு தான் முக்கியம் கட்சிக்கு கொஞ்சம் ஆட்சிக்கு கொஞ்சம் என்று கூட்டு சேர்ந்து கொள்ளை அடிப்போம் இந்தியாவை கூறு போட்டு விற்போம் எவனும் கேக்க கூடாது


NellaiBaskar
மார் 20, 2025 08:34

இப்படியே நகைச்சுவை பண்ணிக் கொண்டே இருந்தால் நாட்கள் கழிந்து விடும். சட்டசபை செல்ல இயலாது.


சுராகோ
மார் 20, 2025 08:25

தண்ணீர் மக்களுக்கு எங்கிருந்து கிடைக்கும் என்று இவர் சொல்லலாம்.


Moorkkan
மார் 20, 2025 05:54

இது கருக்கலைப்பு அல்ல சோமானே??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை