உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கச்சத்தீவு விவகாரத்தில் சட்டசபையில் முதல்வர் தவறான தகவல்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு

கச்சத்தீவு விவகாரத்தில் சட்டசபையில் முதல்வர் தவறான தகவல்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

செங்கல்பட்டு: கச்சத்தீவு விவகாரத்தில் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார் என்று அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் அண்ணாமலை நிருபர்களிடம் பேசியதாவது; எல்லா தமிழக மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதே நேரத்தில் ஒரு பெரியநாடு, பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிற நாடு, இலங்கைக்கு ரொம்ப நட்பாக இருக்கக்கூடிய நாடு. இந்திய பிரதமர் கோரிக்கைக்கு இலங்கை பிரதமர் செவி சாய்ப்பார்கள் என்பதில் முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.படகையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்லி உள்ளனர். எனவே நிச்சயம் இலங்கை அதை கவனத்தில் கொண்டு அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் இதை எல்லாம் மறைத்துவிட்டு, முதல்வர் சட்டசபையை தவறாக வழி நடத்தி உள்ளார். பேச்சுவார்த்தை நடந்து இருக்கிறது. பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, பத்திரிகையாளர்களுக்கு என்ன பேசினோம் என்பதை பிரதமர் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் இதை மறைத்துவிட்டு, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் பொய்யை சொல்லி இருக்கிறார் முதல்வர்.கச்சத்தீவு பற்றி அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்கும் தெரியாது, முதல்வருக்கும் தெரியாது. ஒரு நாட்டின் ரகசிய திட்டங்களை பொதுவெளியில் பேசுவது கிடையாது. தி.மு.க.,வுக்கு முன்பே எங்களின் நிலைப்பாடு கச்சத்தீவை திரும்ப கொண்டு வரவேண்டும் என்பது தான். ஆகவே முதல்வர் அவர்கள் எங்களுக்கோ, பிரதமருக்கோ கச்சத்தீவு பற்றி பாடம் எடுக்க வேண்டாம். கச்சத்தீவு இன்று இன்னொரு நாட்டின் சொத்து. கத்தியைக் காட்டி, துப்பாக்கி முனையில் அதை கொண்டு வரமுடியாது. தமிழகத்தின் இந்த கோரிக்கையை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வைத்து இருக்கிறோம். எனது செருப்பை கழட்டி நான்கு மாதம் ஆகி விட்டது. காரணம் என்ன, தி.மு.க., ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் என்பதற்காக செருப்பை தூக்கி எறிஞ்சு 4 மாசம் ஆச்சு. ஆகவே களத்தில் இருந்து போராட போகிறேன். எனது நேரம் முழுவதுமே களத்தில் இருக்கப்போவது. அதிகம் பயணம் இருக்கப்போகிறது. மக்களோடு மக்களாக இன்னும் அதிகமான பணிகள். இந்த மாநிலத்தலைவர் என்ற நிறைய பணிகள் எனக்கு இருக்காது. அமைப்பு ரீதியான பணிகள் வேறு ஒருவர் செய்யட்டும். அதுபற்றி எனக்கு சந்தோஷம்தான். அதனால் தான் மாநிலத் தலைவர் என்ற போட்டியில் நான் இல்லை என்று சொன்னேன். காரணம்... களத்திலே இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.களத்தில் இருப்பேன். தொண்டர்கள் யாராக இருந்தாலும் அவர்களோடு சேர்ந்து நான் இருப்பேன்.தலைவர் பதவி இருப்பதால் யாரும் ஒருவர் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்ற அவசியம் இங்கே யாருக்கும் இல்லை. பதவிகள் வரும், போகும். ஆகவே எல்லாருமே இன்னும் சுறுசுறுப்பாக, வேகமாக, வீரியமாக களத்தில் போராட வேண்டும் என்று தொண்டர்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.தி.மு/க., ஊழலை இன்னும் வீரியமாக, வேகமாக சொல்லத்தான் போகின்றோம். மோடி அய்யாவுக்காக அரசியலுக்கு வந்தவன் நான். அவர் கிணற்றில் குதி என்றால் குதிக்கிற ஆள்நான். நான் ஒரு கட்சியை பார்த்தோ அல்லது சித்தாந்தத்தை பார்த்தோ அரசியலுக்கு வரவில்லை. அது எல்லோருக்கும் தெரியும். நரேந்திர மோடி என்ற ஒற்றை மனிதருக்காக அரசியல் களத்தில் நான் நிற்கிறேன்.நான் ஒரு கட்சியில் உறுப்பினராக சேர்ந்து கிளைக்கழக தலைவராக சேர்ந்து இந்த கட்சிக்கு வரவில்லை. இந்த கட்சியில் 36 வயசுல நான் ஒரு உறுப்பினராக வந்து சேர்ந்தேன். மோடி அவர்கள் கைகாட்டுவார். இதை செய் என்றால் நான் செய்யப்போகிறேன். மோடி அவர்கள் சொல்லும் போது கண்ணை கட்டிக்கொண்டு செயல்படுத்துவது மட்டும் தான் என்னுடைய வேலை. அதனால் மோடி சொல்லுவார்.. நீ தொண்டாக இரு என்றால் இருப்பேன். மோடி என்ன கட்டுப்பாடு விதிச்சாலும் அதை ஏற்று முழுமையாக பணி செய்ய இந்த இயக்கத்துக்கு வந்தேன். அது எப்போதும் தொடரும்.நான் தேசியத்தில் தமிழை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற நினைக்கின்றேன். சீமான் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். அவருடைய கருத்து சில இடத்தில் மாறுபட்ட கருத்தாக இருக்கலாம். என்னுடைய கருத்து வேற இடத்தில் மாறுபட்டு இருக்கலாம்.இருந்தாலும்... தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நேர்க்கோட்டில் இருவரின் வார்த்தைகள் ஒரே மாதிரியாக தான் பிரயோகமாக இருக்கு. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Kasimani Baskaran
ஏப் 08, 2025 04:03

பொய் சொன்னதாக நீதிமன்றத்தில் வழக்குப்போட வேண்டியதுதானே... நாலு நீதிபதிகள் பதவி அல்லது குறைந்தபட்சம் வழக்கில் இருந்து விலகினால் நாட்டுக்கு நல்லதுதானே. தீம்க்காவை விசாரிக்க விடமாட்டேன் என்று பல நீதிபதிகள் மானத்தை விட்டு வேலை செய்யமாட்டேன் என்று விலகி இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.


மதிவதனன்
ஏப் 08, 2025 00:35

சரி இந்த அண்ணாமலை தகுதி தான் என்ன கவுன்சிலர் MLA MP எதுவும் இல்லை ஆனால் பாவ் யாத்திரை சென்று கோடி கணக்கில் வசூலித்தார் என்று ADMK கோவை வேட்பாளர் செங்கை சீனி தெரிவித்தார் இவர் உண்மையானவர் என்றால் அவர் மீது வழக்கு தொடுத்து இருக்கனும் , இவரின் பிம்பம் சோசியல் மீடியா வில் மட்டும் தான் , இவரை யாரும் நம்ப தயார் இல்லை , வாய்ச்சவடால் சிரிப்பு போலீஸ் இப்போதும் இவரிடம் ராஜினாமா கடிதம் வாங்கி கொண்டு துரத்தி உள்ளார்கள்


K.Ramakrishnan
ஏப் 07, 2025 23:42

அண்ணாமலை ஒன்றும் பா.ஜ.வுக்காக உதிரத்தை சிந்தியவர் அல்ல. எதற்காகவோ ஐபிஎஸ் வேலையை விட்டு விட்டு, அரசியலுக்கு வந்தவுடன் தலைவர் ஆனவர். கச்சத்தீவு கைமாற்றிய விவகாரம் நடந்த போது அ.மலை பிறக்கவே இல்லை. ஆனால் எல்லாம் தெரிந்தவர் போல அவர், மற்றவர்களுக்கு வகுப்பு எடுக்கவேண்டாம்.அரசியல் அவர் இன்னமும் ஐந்து வயது குழந்தைதான். உங்கள் சொல்படி நடக்கிற பிள்ளை பி டீம் தான் சீமான் என்பது தமிழ் மக்களுக்கு ஏற்கனவே தெரியும்.அதை இப்போது இருவரும் பகிரங்கப்படுத்தி விட்டீர்கள். சீமான் சுயரூபம் இப்போதாவது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டதே... நன்றி.


K.n. Dhasarathan
ஏப் 07, 2025 21:27

அண்ணாமலை முதல்வர் தவறாக சபையை வழி நடத்துகிறார் என்று சொன்னீர்களே என்ன தவறாக பேசினார் ? ஒரு விஷயம் தெளிவாக பேச மாட்டீர்களா ? நீங்கள் பொய்கள் நிறைய பேசுவீர்கள், என்பது நன்றாகவே எல்லோருக்கும் தெரியும், இப்படி குழம்புவது எதனால் ? பாவம் நிறைய குழப்பத்தில் இருக்கிறீர்கள், கொஞ்ச நாள் பேசாமல், ஓய்வு எடுங்கள், உங்களுக்கு ரொம்ப நல்லது, தப்பு தப்பாக பேசி எக்குத்தப்பாக மாட்டியதெல்லாம் போதாதா ?


Oru Indiyan
ஏப் 07, 2025 21:23

கச்சா தீவு என்றால் அந்த காலத்து கச்சை தான் அவுங்களுக்கு தெரியும்


Thetamilan
ஏப் 07, 2025 21:12

பிரதமர் எப்போதாவது பாராளுமன்றத்திலோ கோவில் விழாக்களிலோ கூட உண்மை பேசியது உண்டா ? அண்ணாமலை எப்போதாவது முதலவரைப்பற்றியோ பிரதாமரைப்பற்றியோ தமிழக அரசைப்பற்றியோ மத்திய அரசைபற்றியோ உண்மை பேசியது உண்டா?


மதிவதனன்
ஏப் 07, 2025 21:02

தம்பி நீ யாரு , உன் தகுதி என்ன , உன்ன ராஜினாமா கடிதம் வாங்கி துரத்தி விட்டார்கள் , மோடி வரும்போது உன்னை மேடை சைடு வரவே கூடாது என்று விரட்டியும் இப்படி புளுகி கொண்டு இருக்க


மீனவ நண்பன்
ஏப் 07, 2025 20:54

கச்சத்தீவு என்றால் மச்சக்கன்னிகள் இருப்பாங்கன்னு நினைத்திருக்கலாம் டீவியில் மானாட மயிலாட மாதிரி நடனங்களை பார்த்தாலும் கச்சத்தீவு தாக்கம் இருக்கும்


Siva Subramaniam
ஏப் 07, 2025 20:37

The rising cost of everything in Tamil Nadu is far more than, cost of LPG. Many commodities are sold at 3 to 400% since the previous assembly election.


M Ramachandran
ஏப் 07, 2025 20:36

மக்கள் விரோமாத அரசசிடமிருந்து பொஅய்யுரைகளையய ஹான் கேஆர்க்க முடியும். சட்டசபைய்ய அறிவாலயமாதிரி போராண்டா டி கொடுத்து உபசரிப்பது போல் கைய்ய தூக்குனகள் என்றவுடன் ஏஆர் எண்ணத்திற்கு என்று கேள்வி கேட்க கூடாது. கேள்வி கேட்டால் சட்டாம் பிள்ளைய்ய வகுப்பாரையிலிருந்து வெளியெ போ வெளியெபோ என்று அறிவித்து விடுவார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை