உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாடகம் எதற்கு; நடவடிக்கை எடுங்க: அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

நாடகம் எதற்கு; நடவடிக்கை எடுங்க: அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; வீண் நாடகங்களை நிறுத்தி விட்டு, தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறி இருப்பதாவது; ஆட்சிக்கு வந்ததில் இருந்து,வெற்று அறிவிப்புகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றுவதையே முழு நேரப் பணியாகச் செய்து வருகிறது தி.மு.க.,அரசு. அதன் வரிசையில் இன்று, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், ரூ.1,000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியிருப்பதாக, முதல்வர் பெருமைப்பட்டிருக்கிறார். கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், தைவான் நாட்டைச் சேர்ந்த காலணி நிறுவனம், ரூ.2,302 கோடி முதலீடு செய்வதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அறிவித்த தி.மு.க., அரசு, அதன் மூலம், 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அறிவித்தது. சுமார் 20 மாதங்கள் கடந்தும், அந்தத் தொழிற்சாலை கட்டுமானத்துக்காக, ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளது.முதல்வர் குடும்பத்துடன் துபாய் சுற்றுலா சென்று, ரூ.6,000 கோடி முதலீடு ஈர்த்துள்ளோம் என்று கூறி ஆண்டுகள் இரண்டு ஆகின்றன. வெறும் ரூ.60 கோடி முதலீடு கூட இன்னும் தமிழகத்தை அடையவில்லை. இதுபோன்ற வீண் நாடகங்களை இனியாவது நிறுத்தி விட்டு, தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அந்த பதிவில் கூறி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Kasimani Baskaran
நவ 16, 2024 07:13

யார் அங்கே... அந்த தகவல் கொடுத்த ஆபீசரை வீட்டுக்கு அனுப்புங்க... துபாய் முதலீடுதான் கூடுதல் முதலீடாக அந்த பாய் கடைக்கு வந்துவிட்டதே...


Smba
நவ 16, 2024 04:39

வெட்டி கூச்சல்


sridhar
நவ 15, 2024 23:27

DMK is only a drama troupe.


krishna
நவ 15, 2024 23:10

DRAVIDA MODEL ENDRAALE DRAMA POYYUM PURATTUM MATTUME


Velan Iyengaar
நவ 15, 2024 22:58

தமிழக காவல் நிலைய தேடப்படும் பட்டியலில் இடம் பெறாமல் இருக்க செய்யும் பரிதாப ப்ரயத்னத்தை பார்த்து பரிதாபப்படும் தேச பக்தி ஆட்களில் நானும் ஒருவன் .......


Velan Iyengaar
நவ 15, 2024 22:55

காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்க தடுக்க செய்யும் முயற்சி. பார்க்க பரிதாபமா இருக்கு .....ஹி ஹி ஹி ஹி


hari
நவ 15, 2024 23:41

அது எப்படி திமிங்கலம்... சிட்னிநியூ சொல்லிகிட்டு ஒரு கொத்தடிமை???


Mettai* Tamil
நவ 16, 2024 10:09

செ பா வுக்கு அடுத்த லிஸ்டில் இருக்கும் ஊழலை பார்த்து பரிதாபப்பட்டால் கூட increment கிடைக்க வாய்ப்பு இருக்கு ....இவருக்கு போய் ஏங்க ......


Suresh sridharan
நவ 15, 2024 22:29

ஆரம்பம்


Shunmugham Selavali
நவ 15, 2024 22:23

சரியான கேள்வி.


T.sthivinayagam
நவ 15, 2024 21:56

போட்டோ அண்ணாமலை சாரேடது மேட்டர் யார் எழுதியது


Sathyanarayanan Sathyasekaren
நவ 15, 2024 22:11

கொத்தடிமை திவிநாயகம், இதே கேள்வியை கோபாலபுரம் குடும்பத்திடம் கேட்க துணிவு இருக்கா கொத்தடிமையே?


Bala
நவ 15, 2024 22:45

மேட்டர் அவருடையது இல்லை. ஓகே ஆபிசர். யாருடையதாக இருந்தால் என்ன. திராவிட மாடலிடம் பதில் இருக்கிறதா?


Kasimani Baskaran
நவ 16, 2024 07:16

மேட்டரை விட்டுவிட்டு சொன்னவரை, அவரது குடும்பத்தை பழிப்பது உடன் பிறப்புக்களுக்கு இடப்பட்ட கட்டளை. 300 ரூபாய்க்கு மண்டையை விற்ற கோஷ்டி இது.


முக்கிய வீடியோ