உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருட்டு மற்றும் சுரண்டல் திமுகவின் டிஎன்ஏவில் ஊறிப்போனது; அண்ணாமலை விமர்சனம்

திருட்டு மற்றும் சுரண்டல் திமுகவின் டிஎன்ஏவில் ஊறிப்போனது; அண்ணாமலை விமர்சனம்

சென்னை: திருட்டு மற்றும் சுரண்டல் என்பது திமுகவின் மரபணுவிலேயே ஊறிப்போயுள்ளதாக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் கோவில் திருவிழாவிற்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட கேட்டரிங் உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக மதுரை மாநகராட்சி திமுக அவை தலைவர் ஒச்சி பாலு மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பணத்தைக் கேட்டு சென்றால், சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், திமுக நிர்வாகியின் இந்த செயலை பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருட்டு மற்றும் சுரண்டல் என்பது திமுகவின் மரபணுவிலேயே ஊறிப்போயுள்ளது. சமூக நீதியைப் பற்றி அவர்கள் திரும்பத் திரும்ப பேசி வந்தாலும், வெறும் வாய்ச்சொல்லாகத்தான் இருந்து வருகிறது.அரசியலிலோ அல்லது தன் கட்சி உறுப்பினர்களிடத்திலோ அதை கடைப்பிடிப்பதில்லை.மதுரையில் தனக்கு வழங்கப்பட்ட பணியை முடித்த ஒருவர் தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டதால், திமுக நிர்வாகியான ஒச்சு பாலு என்பவர், அவரை சாதியைச் சொல்லி திட்டியதோடு, பொது வெளியில் அவமானப்படுத்தி மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் உண்மையான தன்மையை பிரதிபலிக்கிறது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Venugopal S
செப் 17, 2025 19:06

எண்பது கோடி ரூபாய் சொத்தை நான்கு கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கணக்கு காண்பித்து எழுபத்தாறு கோடி ரூபாய் கறுப்புப் பணமாகக் கொடுத்து அரசுக்கு வரி நஷ்டத்தை ஏற்படுத்திய இவருக்கு மற்றவர்களைக் குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது?


Senthoora
செப் 17, 2025 18:34

அதுசரி, ஒரு பதவியும் இல்லாமல் தமிழ்நாட்டுக்கு ஒரு சுட்கேசுடன் வந்தவர் நீங்க, பலகோடி சொத்துக்கு சொந்தக்காரர் ஆனது எப்படி, திமுகவில் சேர்ந்துட்டீங்களா?


raja
செப் 17, 2025 17:48

உண்மைதான்... திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டத்துக்கு ஜி என்றால் மிகவும் பிடிக்கும் ரெண்டு ஜி யில் கொள்ளை அடித்து ஜி சதுரத்தில் முதலீடாய் போட்டு சாமானியனை சுரண்டுகிரானுவோ...


karupanasamy
செப் 17, 2025 17:19

யப்பா டேய் காமராஜர் சரி அது என்ன ஒரு அயோக்கியனை யோக்கியனாக்க காமராஜருடன் சேர்த்து போட்டா எப்புடி?


K.Ramakrishnan
செப் 17, 2025 16:48

அண்ணாமலை நீ வாய் பேசாதே- அரசுப்பணியை விட்டு இறங்கிய நீ, ஐந்தாண்டுகளில் எப்படி 80 கோடியில் நிலம் வாங்க முடிந்தது? தலைவரான பிறகு, எனது மாதாந்திர செலவுக்கே நண்பர்கள் மாதாந்திரம் ரூ.8லட்சம் தருவதாக சொன்னவர், எப்படி பணம் சேமிக்க முடிந்தது? சேமிப்பில் பணம் இருந்தது என்றால், மாதம் ரூ.8லட்சம் பிறரிடம் வாங்கியது ஏன்?ஆளும்கட்சியின் மாநிலத் தலைவர்,பிறரிடம் மாதம் எட்டு லட்சம் வாங்கினார் என்றால், இவர் மூலம் ஏதாவது ஆதாயம் அடைந்திருப்பார்கள்? இதை எல்லாம் மத்திய பாஜக அரசு விசாரணை நடத்தவேண்டும்.நேர்மையாளன் என்றால், மாதம் எட்டு லட்சத்தை பிறரிடம் வாங்கி இருக்கக்கூடாது. ஐபிஎஸ் அதிகாரி பதவியை விட்டு விட்டு அரசியலுக்கு வந்தாலே யோக்கியன் அல்ல என்பது உலகத்துக்கே தெரியும். 200கோடியை விட்டுவிட்டு கட்சி துவங்கியதாக சொல்கிறவரும் மக்கள் பணிக்காக வரவில்லை. அதை விட அதிகம் சம்பாதிக்க முடியும் என்ற பேராசையில் தான் வருகிறார்.அரசியலுக்கு வந்த எவருமே புனிதர்கள் அல்ல.காமராஜர், அண்ணாவுடன் அந்த கதை முடிந்து விட்டது.


N Sasikumar Yadhav
செப் 17, 2025 17:52

அண்ணாமலை தெளிவாக விளக்கம் கொடுத்த பிறகும் நீங்க கேனத்தனமாக கேள்வி கேட்கிறீர்களென்றால் அண்ணாமலை சொன்ன திராவிட மரபணு உங்க உடம்பில் இருப்பதாக அர்த்தம்


SJRR
செப் 17, 2025 16:47

உங்களைத்தவிர திமுகவை யாரால் இப்படி கேள்விகேட்க முடியும். பட்டும் படாமல் பேசிவிட்டு செல்பவர்கள் மத்தியில் உங்களைப்போல் ஒரு ஆளுமை தமிழகத்திற்கு தேவை.


முக்கிய வீடியோ