உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவக்கழிவுகள் கொட்டுவதை கேரளா நிறுத்தாவிட்டால்...! அண்ணாமலை எச்சரிக்கை

மருத்துவக்கழிவுகள் கொட்டுவதை கேரளா நிறுத்தாவிட்டால்...! அண்ணாமலை எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் கழிவுகள் கொட்டுவதை கேரளா நிறுத்த வேண்டும்; தமிழக அரசு கேரளாவை தடுத்து நிறுத்த வேண்டும்; நிறுத்தாவிட்டால் கழிவுகளை லாரிகளில் ஏற்றி, கேரளாவில் கொண்டு சென்று கொட்டுவோம்; முதல் லாரியில் நானும் வருவேன்' என்று பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a6no501t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காவிரி நீர் உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை தனது கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை, கேரள கம்யூனிஸ்ட் அரசின் குப்பைக் கிடங்காக மாற்றவும் அனுமதித்திருக்கிறார். கேரள கம்யூனிஸ்ட் அரசுடன் தி.மு.க., அரசு உறவாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், கேரள மாநிலத்தின் பயோமெடிக்கல், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக நமது தென் மாவட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.தினம், தினம் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் இந்தக் கழிவுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய சோதனைச் சாவடிகள், வெறும் வசூல் மையங்களாக மட்டுமே மாறிவிட்டன.ஒருபுறம் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்குச் சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைக் கண்டும் காணாதது போல் இருக்கும் தி.மு.க., அரசு, மறுபுறம் தமிழகத்தை குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்திக்கொள்ள சுதந்திரமான அனுமதி அளித்துள்ளது.அதிகாரிகளிடமும், முதல்வர் தனிப்பிரிவுக்கும் பலமுறை புகார் அளித்தும், இதனைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க தி.மு.க., அரசுக்குத் தெரிந்தே இவை நடைபெறுகின்றன. உடனடியாக, கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் தி.மு.க., அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இனியும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், வரும் 2025 ஜனவரி முதல் வாரத்தில், பொதுமக்களைத் திரட்டி, இந்த உயிரியல் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று, கேரளாவில் கொண்டு கொட்டுவோம். முதல் லாரியில் நானும் செல்வேன் என்பதைத் தி.மு.க., அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

skv srinivasankrishnaveni
டிச 19, 2024 09:34

கேரளாலே ஏ கொட்டுங்க ஆல்சோ கொளுத்தவும் உடனே புகை சூழ்தல் மூஉலமா அறிவு varuthaannuppappome


அப்பாவி
டிச 18, 2024 10:50

முதல் லாரியை ஓட்டிட்டு போங்க தல.


வல்லவன்
டிச 17, 2024 23:08

மலையாளி எங்கன அடிச்சாலும் டுமிழன் தாங்குவான் மனசிலாயோ


நிக்கோல்தாம்சன்
டிச 17, 2024 21:01

மனதை போல அவர்களின் கழிவுகள்


venugopal s
டிச 17, 2024 20:59

கடந்த பத்து ஆண்டுகளாக இதெல்லாம் இவர் கண்களுக்கு தெரியாமல் இருந்ததா? தேர்தல் நெருங்கும் போது தான் தமிழ்நாட்டின் மீது இவருக்கு திடீர் அக்கறை வருகிறதோ?


Rpalni
டிச 17, 2024 20:15

த்ரவிஷ மொடேலுக்கு அண்ணாவின் ஓபன் சேலஞ்? சுற்று சூழல் அன்பர்களும் அண்ணாவின் ஓபன் இன்விடேஷன் அண்ணாவின் அபார ஆட்டம் ஸ்டார்ட்


Pandi Muni
டிச 17, 2024 19:32

குப்பையோடு வரும் வண்டிகளை தீய வச்சி கொளுத்த வேண்டியதுதானே.


தமிழ், கோவை
டிச 17, 2024 18:27

ஐயா நம்ம check post லாம் என்ன வேலைக்கு இருக்கு?


வால்டர்
டிச 17, 2024 17:46

அட பாவிகளா... இன்னுமா எச்சரிக்கை? இது ரொம்ப வருசமா நடந்திட்டு தான இருக்கு.


Ram pollachi
டிச 17, 2024 17:19

கோபி, சத்தி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து அதிக அளவில் வாழைக்காய் கொண்டு செல்வது வழக்கம், வண்டியின் உள்பகுதியில் வாழை மட்டை இலைகளை காய் அடிபட்டு விடாமல் இருக்க கட்டிவிடுவார்கள்... மக்கி மண்ணாகும் இதை கூட அங்கே கொட்ட அனுமதி கிடையாது மீறினால் கடும் அபராதம், இது கூட மீண்டும் தமிழகம் வந்து விடும் அதே வண்டியில். அமெரிக்க மருத்துவ கழிவுகள் மேட்டுப்பாளையம் பகுதியில் கொட்டிய நினைவுகளை மறக்க முடியாது.


முக்கிய வீடியோ