உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டம்-ஒழுங்கு கெடுவதற்கு பா.ஜ.,வே காரணம்: சேகர்பாபு

சட்டம்-ஒழுங்கு கெடுவதற்கு பா.ஜ.,வே காரணம்: சேகர்பாபு

சென்னை:தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, செனாய் நகர், சேத்துப்பட்டு பகுதிகளில் அன்னம் தரும் 'அமுதக்கரங்கள்' நிகழ்வில் பங்கேற்ற, அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:தி.மு.க., மற்றும் தமிழக அரசு குறித்து இஷ்டத்துக்கும் பேசி வருகிறார் பா.ஜ., மூத்த தலைவர் ராஜா. அவர், பா.ஜ.,வுக்கு மட்டுமல்ல; தமிழகத்துக்கே ஏழரை நாட்டு சனி. அவர் சொல்வதற்கெல்லாம் நான் என்னத்த பதில் சொல்ல. தமிழக கோவில்களில் மருத்துவமனை வசதி இருந்திருந்தால், சமீபத்தில் நிகழ்ந்த பக்தர்கள் மரணம் ஏற்பட்டிருக்காது என சொல்கின்றனர். தமிழகத்தில் ஒரு கோவிலில் மட்டுமே மருத்துவமனை வசதி இருந்தது. தற்போது, 17 கோவில்களில் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நடந்திருக்கும் சில கொலைகளால், தமிழக சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. முன்விரோதம் உள்ளிட்ட காரணங்களால் எதிர்பாராத மரணம் ஏற்படுவது இயற்கை. குற்றவாளிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓட்டம் பிடிக்கும் அளவிற்கு, தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அமைதி பூங்காவான தமிழகத்தில், அவதுாறு கற்பிப்பது தான் பா.ஜ.,வினர் நோக்கமாக உள்ளது. அப்பாவி தொண்டர்களை அரசுக்கு எதிராக துாண்டிவிட்டு, தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு கெடுவதற்கு பா.ஜ., தலைவர்கள் காரணமாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !