உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமலாக்கத்துறை மூலம் முடக்க முயற்சிக்கிறது பா.ஜ.,

அமலாக்கத்துறை மூலம் முடக்க முயற்சிக்கிறது பா.ஜ.,

மதுரை : நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை மூலம் காங்கிரசை முடக்குகிறது பா.ஜ., என, தமிழக புதுச்சேரி காங்., தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் பாவ்யா குற்றம்சாட்டினார்.மதுரையில் அவர் கூறியதாவது: காங்., மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கு காங்கிரசை பழிவாங்கும் பா.ஜ.,வின் அரசியல் நடவடிக்கை. மத்திய அரசுக்கு எதிராக காங்., மேற்கொள்ளும் போராட்டங்களை எதிர்கொள்ள முடியாததால் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மக்களுக்கு விரோதமாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் அரசை நடத்துகிறார். இதற்கு எதிராக தேசிய அளவில் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.ராகுல் வலிமையான, பா.ஜ.,வுக்கு குடைச்சல் கொடுக்கும் தலைவராக உருவெடுத்துள்ளார். இதை எதிர்கொள்ள முடியாமல் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் பொய்யான வழக்குகளை மீண்டும் மீண்டும் தொடர்கின்றனர். 2015ல் முடிந்துபோன நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல், சோனியாவை மீண்டும் சேர்த்துள்ளனர். அமலாக்கத்துறை (இ.டி.,) மூலம் காங்.,ஐ முடக்குகின்றனர். இ.டி., தற்போது மத்திய அரசின் ஒரு துறையாகவே மாறிவிட்டது. வழக்கை காங்., சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்என்றார். நகர் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை