உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புனிதர் போல நாடகம் போட முயற்சி; முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

புனிதர் போல நாடகம் போட முயற்சி; முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

சென்னை: வடமாநிலத்தவர்கள் குறித்து திமுகவினர் வசைபாடியதை பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியதைக் கண்டு குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததும், தேச ஒற்றுமை குறித்து பதிவிட்டு புனிதர் போல நாடகம் போட முயற்சிக்கிறீர்களா? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை; இன்று தமிழர்கள்-பீஹாரிகள் ஒற்றுமைக்காக காலையிலேயே கொதித்தெழுந்து பதிவிட்டுள்ள முதல்வரே! தங்களது தேர்தல் பிரச்சாரத்தின் போது, வயிற்றுப் பிழைப்புக்காக வரும் வடமாநிலத்தவர்களைத் தமிழகத்திற்குள் திமுக என்றும் அனுமதிக்காது என்று சூளுரைத்தீர்களே, அப்போதெல்லாம் தேச ஒற்றுமை மறந்துவிட்டதா? பீஹாரிகள் தமிழகத்தில் கழிவறை கழுவுகின்றனர் என்று தரக்குறைவாக திமுக எம்பி ஒருவர் கூறியபோதும், பானி பூரி விற்பவர்கள் என்று முன்னாள் அமைச்சர் பொன்முடி ஏளனமாகப் பேசிய போதும், தங்களது மூத்த அமைச்சர் துரைமுருகன், வடமாநிலப் பெண்களைப் பன்றிகளுடன் ஒப்பிட்டு வசைபாடிய போதும், வேற்றுமையில் ஒற்றுமை தங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?இப்படித் தாங்களும் தங்கள் திமுக உடன்பிறப்புகளும் அனுதினமும் பீஹார் மக்களைப் பொதுவெளியில் வசைபாடி அவமதிக்கும் உண்மையைத் தான் நமது பாரதப் பிரதமர் மோடி சுட்டிக் காட்டியுள்ளார். அதனைக் கண்டு குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததும், தேச ஒற்றுமை குறித்து பதிவிட்டு புனிதர் போல நாடகம் போட முயற்சிக்கிறீர்களா? தேச ஒற்றுமையைப் பேணிவரும் இச்சமூகத்தில் வடக்கு-தெற்கு என்ற பிரிவினையை உண்டாக்கத் துடிக்கும் உங்கள் அரசியல் முயற்சி முற்றிலும் வீண்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zgukb7yp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காரணம், பொழுது போகாவிட்டால் வடமாநிலத்தவர்களை வசைபாடி வன்மத்தைக் கக்குவது, பீஹாரில் தேர்தல் காலம் வந்தால் வடமாநிலத்தவர்களைப் 'பிரதர்' எனக் கூறி இண்டி கூட்டணியினருடன் போட்டோஷூட் நடத்துவது போன்ற அறிவாலயத்தின் பம்மாத்து நாடகங்களை ஒட்டுமொத்த இந்தியர்களும் உணர்ந்துவிட்டனர். எனவே, ஆட்சி முடியும் தருவாயிலாவது தங்கள் இருமுகன் வேடத்தைக் களைந்துவிட்டு, முதலில் தமிழக மக்களின் தேவைகளைக் கண் திறந்து பாருங்கள்!, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

T.sthivinayagam
அக் 31, 2025 21:10

தமிழக பாஜக முன்னாள் இன்னாள் தலைவர்கள் போல இந்திய பிரதமர் அவர்கள் பேசுவது பிரதமர் பதவிக்கு அழகு அல்ல.


என்றும் இந்தியன்
அக் 31, 2025 16:59

ஓங்கோல் தெலுங்கன் டாஸ்மாக்கினாட்டின் முதல்வர்??? இது எப்படி??? அப்போ ஒண்ணு பண்ணலாமா??வேறு மாநிலத்தவர் டாஸ்மாக்கினாட்டிற்கு வந்து தொழில் செய்ய அனுமதி இல்லையென்றால் நீ தெலுங்கானா அல்லது ஆந்திர மாநிலத்திற்கு சென்று விடுங்களேன்??நீங்க தமிழன் இல்லை?? கனிமொழி சிங்கப்பூர் பிரஜையை கல்யாணம் செய்து கொண்டவர் அப்போ அவர் சிங்கப்பூர் பிரஜை???ஆனால் தமிழ்நாட்டின் எம்பி???


M.Sam
அக் 31, 2025 16:17

பத்திரிகையாளர்களை கண்டாலே தலை தெறிக்க ஓடும் உங்க ஜி தான் உலகம் போற்றும் தலியம் நட்டான் பொது துறையைகளி விற்று அம்பானிகளையும் அதனிகளையும் வளருது விட்டவர்த்த சிறந்த பிரதான்மந்திரியம் மணிப்பூர் மற்றும் தமிழ் நாட்டில் உண்டான விபத்துக்கு கூட வர்றது உங்க தல தான் அப்பழகுஅற்ற தலையம்


திகழ் ஓவியன்
அக் 31, 2025 13:57

அண்ணே, நீங்க கேட்ட ஒவ்வொரு கேள்வியும்....


Mr Krish Tamilnadu
அக் 31, 2025 13:48

இன்று எல்லா இடத்திலும் வேலை அடிமைகள் தான் தேவை படுகிறார்கள் முதலாளிகளுக்கு. 8 மணி நேர வேலை, லேபர் யூனியன், வருட வருடம் விகிதாச்சார சம்பள உயர்வு என வேலை செய்பவனும் மனிதன் அவன் ஆயுளுக்கு அதே வேலையை தொடர்ச்சியாக செய்ய வேண்டும். ஆகவே குறிப்பிட்ட நேர வேலை, தகுந்த இடைவெளி என தீர்மானித்தால், அந்த விதிகளை காரணம் காட்டி இங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைத்து, வேறு மாநிலத்தவர் தான் உடல் உழைப்பு ஊதியம் பெறுகின்றனர். திருப்பூர் ரயில்நிலையத்தை தீபாவளிக்கு பார்த்தவர்களுக்கு புரியும். காவிரி நீரின்றி ஒரு காலத்தில் தமிழக விவசாயிகளின் நிலையை, தற்போது தமிழக வியாபாரிகள் சந்திக்க தொடங்கி விட்டனர். ஆன்லைன் வியாபாரம் போக, அவசர தேவைக்கு உள்ளூர் வியாபாரம் என போய் கொண்டு இருக்கிறது. ஜி.எஸ்.டி வருவாய் வைத்து வியாபாரம் ஓகோ என கூறி கொள்ளலாம். எத்தனை கடைகள் மூடப்படுகின்றன என்ற கணக்கை உள்ளூர் நிர்வாகங்களிடம் கேட்டால் தெரியும். தமிழனின் பேஸ்மட்டம் வீக் ஆகி கொண்டு உள்ளது.


புதிய வீடியோ