உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காந்தி பெயரை நீக்கி விட்டதாக பொய் பிரசாரம்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜ குட்டு

காந்தி பெயரை நீக்கி விட்டதாக பொய் பிரசாரம்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜ குட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மஹாத்மா காந்தி பெயர் மாற்றம் என்பது தவறு. பெயரை நீக்கி விட்டார்கள் என்ற தவறான பிரசாரத்தை எதிர்க்கட்சியினர் செய்கின்றனர் என தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார்.மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட, 'விபி ஜி ராம் ஜி' மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. மஹாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து, தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெ ளியிட்ட அறிக்கை: தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் 2005 ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் துவங்கப்பட்டது.

பழையன கழிந்து...!

கிராமப்புற குடும்பங்களில் உள்ள மக்களுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்தல், வறுமையைக் குறைத்தல், இயற்கை வளங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் என்று 2009ல் தான் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 20 வருடங்களுக்கு மேலான இந்த திட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டு, வளர்ச்சியடைந்த பாரதம் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும் கிராமப்புற வாழ்வாதார பணி சட்டம் 2025 என்ற சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. பழையன கழிந்து புதியன புகுத்தும் இந்த திட்டத்திற்கென புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியள்ளது மத்திய அரசு.

தவறேதும் இல்லை

இந்த திட்டத்தின் பெயரை மாற்றியமைப்பது இந்த சட்டத்தின் நோக்கமல்ல, ஆனால், இன்றைய கால சூழ்நிலைக்கு திட்டத்தை மாற்றுவது காலத்தின் கட்டாயம். புதிய திட்டத்திற்கு புதிய பெயர் வைப்பதில் தவறேதும் இல்லை. 2014ல் மஹாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 33,000 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 86,000 கோடியாக உயர்ந்துள்ளது. புதிய சட்டத்தின் மூலம் அமலாகும் இந்த திட்டத்திற்கான ஆண்டு ஒதுக்கீடு ரூபாய்.1,51,852 கோடி ஆகும். இதில் மத்திய அரசின் பங்கு ரூபாய். 95,692 ரூபாய். (60%). அதாவது பத்தே ஆண்டுகளில் 33,000 கோடி ரூபாயாக இருந்த மத்திய அரசின் நிதி ரூபாய். 1,51,852 கோடியாக ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

ரூ.84 லட்சம் கோடி

தமிழக முதல்வர் ஸ்டாலின் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு குறைத்து விட்டதாக சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் 10 வருடங்களில் மத்திய அரசு திட்டங்களுக்கு 22 லட்சம் கோடி அளிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 வருடங்களில் பாஜ ஆட்சியில் ரூ.84 லட்சம் கோடி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த புதிய திட்டத்தின் கீழ், நூறு நாட்களாக இருந்த வேலைவாய்ப்பு நூற்று இருபத்தைந்து நாட்களாக உயர்த்தப்படுகிறது.

டிஜிட்டல் மயமாக்கல்

பல்வேறு முறைகேடுகளை கொண்டிருந்த பழைய திட்டத்தில் இருந்த ஒட்டைகள் அடைக்கப்பட்டு, முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாகி, முறைகேடுகளில்லாமல், தகுதியான பயனாளிகள் மட்டுமே பயன் பெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது புதிய திட்டம். மேலும், பெண்கள், வயதானவர்கள், மாற்று முக்கியத்துவம் திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைய வளர்ச்சியடைந்த பாரதம் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் வழி வகை செய்கிறது.

காழ்ப்புணர்ச்சி

இதன் பயன்கள் மக்களை அடைந்து விடுமோ என்கிற காழ்ப்புணர்ச்சியில், அச்சத்தில், மஹாத்மா காந்தியின் பெயரை நீக்கி விட்டார்கள் என்ற தவறான பிரசாரத்தை மேற்கொண்டு உண்மையை மறைக்க முயல்கின்றனர் எதிர்க்கட்சியினர். நவீன இந்தியாவை, வளர்ச்சியடைந்த இந்தியாவை படைக்க மக்கள் தயார், எதிர்கட்சிகளின் உள்நோக்கத்தை மக்கள் முறியடிப்பார்கள். இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

spr
டிச 19, 2025 20:53

"மஹாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் என்ற பெயரை இதனால் பலமடையும் பலர் அறிய மாட்டார்கள் அவர்களுக்கெல்லாம் இது ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் என்றுதான் அறியப்படுகிறது முகவர்களுக்கோ ஆள் பிடித்துக் கொடுக்க வசூல் பலருக்கு இது "வேலையில்லாமல் வருமானம்" பெரும் வழியென்றுதான் அறியப்பட்டுள்ளது தமிழகத்தில், இந்தத் திட்டத்தால் என்ன செலவு, என்னென்ன திட்டங்கள் நடைபெற்றன என்று எவரேனும் பட்டியலிட்டுச் சொல்ல இயலுமா?


Thravisham
டிச 19, 2025 18:43

எல்லாத்துக்குமே காந்தி பேர் தானா? சுதந்திரத்துக்கு போராடிய மற்ற தலைவர்கள் ஒருவருமேயில்லையா திருப்பூர் குமரன் அல்லது பகத் சிங் பேர் வைக்கலாமே. இந்த காந்தி நேரு தான் சுதந்திரத்துக்கு போராடிக் கொண்டே இருந்தார்களா? மற்றவர்கள் கள்ள பொரி விற்றுக் கொண்டிருந்தார்களா?


M.Sam
டிச 19, 2025 16:14

உங்க இஸ்ரவே வாங்கி கவனரே சொல்லிட்டாரு நோட்டில் இனி காந்தி படம் அச்சிடப்பட்ட மாட்டாது என்று இது உங்க குமபலின் பதில் என்ன ? போவியா


vivek
டிச 19, 2025 17:48

ஏல சாமு. போய் கேசு போடு....


sankar
டிச 19, 2025 15:43

இந்த திட்டத்தில் அதிக பயன்பெறுவது தமிழக அரசியல்வாதிகள்தான் - ஆகவே இந்த அழுகை


Anantharaman Srinivasan
டிச 19, 2025 15:03

நாராயணா.. மா.காந்தி பெயரை ஏன் மாற்றினார்கள் என்று கேட்டால் குழப்பி போகாத ஊருக்கு வழி சொல்றே.


Ganesan
டிச 19, 2025 15:48

நாராயணனே, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்..........


Suppan
டிச 19, 2025 16:19

இந்தத்திட்டத்தின் பெயர் ஜி ராம் ஜி . ஆம் காந்தி நாள்தோறும் வணங்கிய ராமனின் பெயர் சூட்டப்பட்டுள்ளதே


Ulaganathan P
டிச 19, 2025 14:26

இந்த திட்டத்தால் கிராமப் புறங்களில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை மற்றும் தவறாக நடைமுறைப் படுத்திவதால் வேலை எதுவும் செய்யாமல் ஆட்கள் போய்விட்டு வந்து விடுகிறார்கள் என்று பரவலாகக் குற்றம் சுமத்துகின்றனர். இந்த திட்டம் கிராமப்புறங்களில் வறுமையை அகற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம். கிராமங்களில் எல்லா நாட்களிலும் வேலை கிடைப்பது இல்லை. ஆகையால் குறைந்த பட்சம் 100 நாட்களாவது வேலைக்கு உத்தரவாதம் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு இந்தத் திட்டம் அமலுக்கு வந்தது. இதில் குறைபாடுகள் இருக்கின்றன. அவை களையப்பட வேண்டும். ஓட்டைகளை அடைத்து விட்டு சீர் செய்ய வேண்டும். எந்தக் காரணம் கொண்டு இதைக் கை கழுவி விடக்கூடாது.


veeramani
டிச 19, 2025 13:39

தென் தமிழ்நாட்டில் வசிக்கும் விவசாயின் குமுறல் .. எங்களுக்கு விவசாய வேலைகளுக்கு வேலையாட்கள் கிடைப்பதில்லை முதலில் இந்த மடத்தனமான திட்டத்தை நிறுத்துங்கள். விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியும்


Suppan
டிச 19, 2025 16:22

அதனால்தான் விவசாய வேலைகள் குறிப்பாக நடவு, அறுப்பு நடைபெறும் நாட்களில் இந்த புதிய திட்டம் அமல் செய்யப்படாது. சம்பந்தப்பட்ட மாநிலங்கள் இந்த விவசாய நாட்களை அறிவிக்க வேண்டும்.


கனோஜ் ஆங்ரே
டிச 19, 2025 13:29

... புளுகுறதுக்கு ஒரு எல்லையே இல்லையா...? எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு உன்னோட பதில் ///காந்தி பெயரை நீக்கி விட்டதாக பொய் பிரசாரம்://// அப்படீன்னு பதில் சொல்ற... அப்புறம் விரிவாக சொல்றப்ப ///இந்த திட்டத்தின் பெயரை மாற்றியமைப்பது இந்த சட்டத்தின் நோக்கமல்ல//// அப்படீன்னு சொல்ற...? இருக்குறா, இல்லையா...? ரெண்டுத்துல ஒன்றுதான் பதில் சொல்லணும்... இருக்கு.... ஆனா, இல்ல...? அப்படீன்னு யாரை குழப்புற நடுத்தெரு நாராயணா...? அது சரி.... அந்த சட்டத்துக்கு /// G RAM G சட்டம்/// அப்படீன்னு பெயர் மாற்றி சூட்டி இருக்கிறீர்களா இல்லையா... யார் அந்த G RAM G ....? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி... இது மதச்சார்பற்ற - மதநல்லிணக்க - சமதர்ம சமுதாய நாடு...? ஆனால்... G RAM G சட்டம் அப்படீன்னு பெயர் வச்சா.. யார் அந்த RAM?


Pathmanaban
டிச 19, 2025 14:56

பொப் சொல்வதில் பட்டம் பெற பாஐத வில் சேருங்கள்


Rajamani K
டிச 19, 2025 15:09

நமது நாடு இந்து நாடாகத்தான் இருக்க வேண்டும். அந்நிய மதம் ஆக்கிரமிப்பில் ஏமாற்றி புகுத்தப் பட்டது. செகுலர் என்பது ஏமாற்று வேலை.


Suppan
டிச 19, 2025 16:24

காந்தி தினமும் வணங்கினாரே அந்த ராம் தான்


vivek
டிச 19, 2025 17:45

ஆங்கிரே எதுக்கு வீணா பொங்குறே


V Venkatachalam, Chennai-87
டிச 19, 2025 17:54

ரொம்ப ஓவரா பொங்கப்பிடாது. அப்படி பொங்கிட்டா எல்லாமே சட்டியில் இருந்து வழிஞ்சிடும். அப்புறம் பொங்குறதுக்கு சட்டியில் மறுபடியும் ஊத்தணும். இந்திரா காந்தி பேர்லையும் ராஜிவ் காந்தி பேர்லையும் எத்தனை இருக்கு? அவனுங்க பொதுப்பேரு எதுவும் வைக்க மாட்டானுங்களா? அப்ப எல்லாம் நீ எங்க இருந்த? வந்துட்டான் காலி டப்பாவை தூக்கிட்டு.


Ramesh Sargam
டிச 19, 2025 12:43

காந்தி பெயரை நீக்கிவிட்டதாக குமுறும் திமுக, தமிழகத்தில் எந்த புது திட்டம் வந்தாலும், எந்த புது பேருந்து நிலையம் வந்தாலும், எந்த புதிய பாலம் கட்டப்பட்டாலும், அந்த ஊரில் மகத்தான பொதுப்பணி புரிந்தவர்களின் பெயரை வைக்காமல், எல்லாவற்றுக்கும் கலைஞர் கருணாதி பெயரையும், பெரியார் பெயரையும் வைப்பது முறையா?


S.F. Nadar
டிச 19, 2025 13:37

மஹாத்மா காந்தி உனக்கு என்ன துரோகம் செய்தார் ?? உனக்கு அவர் மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு ?? பதில் சொல் ?


kulanthai kannan
டிச 19, 2025 12:34

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு மகாத்மா காந்தி பெயர் சூட்டலாம்.


முக்கிய வீடியோ