உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பா.ஜ., வலை

 காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பா.ஜ., வலை

சென்னை: காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில், அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை இழுக்கும் பணியில் தமிழக பா.ஜ., ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., மற்றும் காங்கிரசில் அதிருப்தியில் உள்ளவர்கள், பா.ஜ.,வில் இணைய விரும்புகின்றனர். அவர்களை பா.ஜ.,வில் சேர்க்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. தமிழக காங்கிரஸ் துணை தலைவர் நாசே ராமச்சந்திரனை, அவரது வீட்டில் பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். இதையடுத்து, விரைவில், பா.ஜ.,வில் நாசே ராமச்சந்திரன் இணைய உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை