உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திறமை, உழைப்புக்கு வாய்ப்பு பா.ஜ.,வில் மட்டுமே கிடைக்கும்: நிர்மலா சீதாராமன்

திறமை, உழைப்புக்கு வாய்ப்பு பா.ஜ.,வில் மட்டுமே கிடைக்கும்: நிர்மலா சீதாராமன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : '' தமிழகத்திலும் பா.ஜ., ஆட்சி அமைக்க, கடந்த 6 ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகின்றன, '' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.சென்னை கொட்டிவாக்கம் கடற்கரையில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாமில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தமிழகத்திலும் பா.ஜ., ஆட்சி அமைக்கும். அதற்கான பணிகள் 6 ஆண்டுகளாக பெரிய அளவில் நடக்கிறது. சில குடும்பங்களுக்கு மட்டும் பதவி என்பது பா.ஜ.,வில் இருக்காது. எளியவரும் பெரிய தலைவர் ஆகலாம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qs8mvf48&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மிகப்பெரிய கட்சி என்றால் அது பா.ஜ., தான்.பெரிய கட்சி என்றால் அதிக உறுப்பினர்கள் இருக்கறார்கள் என்று அர்த்தம். ஜாதி, மதம், சிறியவர், பெரியவர், தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்ற வித்தியாசமும் இல்லாமல் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் கட்சி பா.ஜ., மட்டும் தான்.மகன், மாமா, மாப்பிள்ளை தான் கட்சியின் தலைவராக இருக்க வேண்டுமா என்ன?பா.ஜ., திறமை உழைப்புக்கு போதுமான வாய்ப்பு வழங்கும். எல்லோருக்கும் சமமான வாய்ப்பு வழங்கும். மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் கொண்டு வந்தது பிரதமர் மோடிதான். பா.ஜ., ஆட்சியில் மீனவர்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. மீனவர்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்தினால், அவர்களுக்கு 3 மடங்கு லாபம் கிடைக்கும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

M Ramachandran
செப் 22, 2024 19:42

திராவிட குடும்ப அரசியலை சொல்லு கிறீர்களா? இங்கு கோல் மால் கோனாப்பல புறம் அரசகுடும்பத்தில் குஞ்சு குழுவான கூட அதிகாரம் செய்யும். தகுதியா அது என்ன என்று கேட்கும் 200 ரூபாய் கொத் அடிமை ஊபீஸ் இருக்கும் வரைய்ய பல்லக்கு தூக்கிகள் முதுகில் கசைய்ய ஆடி பட்டாலும்ம் வேகம் காட்டணும். இது பழய ஜமீன்தார் பரம்பரையை ஞ்யாபக படுத்துது


venugopal s
செப் 22, 2024 18:53

அதுதான் பத்து வருடங்களுக்கு மேலாக பார்த்துக் கொண்டு இருக்கிறோமே!


M Ramachandran
செப் 22, 2024 19:50

என்ன அது பத்து வருடதிற்கு மேல் மாகா அடிமை தொழில் பார்த்ததை சொல்லி கொண்டிருக்கிறீர்களா? வயதானா தீ மு க்கா தொண்டர்கள் மனம் வெதும்பி கட்சியின் செயல் பிடிக்காமல் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இப்போ இருப்பதெல்லாம் நாட்கூலியாக ஒன்லி 200 ரூபாய்களை பெற்று அந்த கோபால புராத்திற்கு சாசனம் எழுதி கொடுத்து கொத்தடிம்மையாக வாழ்வதில் புளகாகிதம் கொள்பவர்கள்


M S RAGHUNATHAN
செப் 22, 2024 17:48

இவர்கள் இனமான பேராசிரியர் என்று கொண்டாடும் அன்பழகன் ஒரு விரிவுரையாளர் தான். .பேராசிரியர் இல்லை ஒரு மண்ணும் இல்லை. இவர்களின் தலைவன் மேல் நடந்து சென்று. கெளரவ முனைவர் பட்டம் வாங்கியவர்.


Iyer
செப் 22, 2024 16:55

இந்த மாண்புமிகு அமைச்சர் சொல்வது 100% உண்மைதான். மன்மோகன் ஆட்சியின் போது பாரத ரத்னா, பத்ம பூஷன் ஆகிய விருதுகள் பணக்காரர்களுக்கும், சைக்கோபான்ட்களுக்கும், முகஸ்துதி செய்பவர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் மோடி அரசு தேசத்தின் மூலைகளிலும் இருந்து தகுதியான, ஏழை மற்றும் தெரியாத மக்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைக் கௌரவித்தது.


Iyer
செப் 22, 2024 16:45

இந்த மாண்புமிகு அமைச்சர் சொல்வது 100% உண்மைதான். தலித்துகள், ஆதிவாசிகளை குடியரசுத் தலைவர் ஆக்குவதன் மூலம் பாஜக மட்டுமே அவர்களை கௌரவித்தது


Iyer
செப் 22, 2024 16:42

இந்த மாண்புமிகு அமைச்சர் சொல்வது 100% உண்மைதான். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆளும் மையத்தில் அல்லது பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு ஊழல் கூட பதிவாகவில்லை.


R Kay
செப் 22, 2024 16:33

100% உண்மை கழகங்களில் வாரிசுகளுக்கு மட்டுமே பதவிகள் கிடைக்கும். உபிக்களுக்கு ஓசி குவாட்டரும், பிரியாணியும் மட்டுமே


முருகன்
செப் 22, 2024 14:46

இதில் எது உங்களுக்கு உள்ளது


N Sasikumar Yadhav
செப் 22, 2024 15:05

உங்க திராவிட மாடலின் மானங்கெட்ட ஆட்சியை போல ஊழல் செய்யாத நிதியமைச்சர் தமிழகத்தின் பொக்கிஷம் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் . ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்கும் நீங்க ரெம்ப திறமைசாலிகள்


ஆரூர் ரங்
செப் 22, 2024 13:51

தீயமுக வாக இருந்தால் ஜால்ரா அடித்து தாளம் போட்டு ஒத்து ஊதுபவர்கள் மட்டுமே பெரிய பதவிகளுக்கு வர முடியும். அதுவும் முடியாட்சி மாதிரி வாரிசாக பிறந்திருப்பது முக்கிய தகுதி.ஆனால் சாதாரண தொண்டன் என்றென்றும் 200 உ.பி யாக போஸ்டர் ஓட்டும் பசைவாளியுடன் அலையவேண்டியதுதான். .


பாமரன்
செப் 22, 2024 13:12

உண்மையா சொல்லுங்க பகோடாஸ்...