உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பூமி பூஜையில் பா.ஜ.,வினர்... பழிவாங்க கட்டுமானத்தை இடித்து தள்ளிய தி.மு.க., அரசு; அண்ணாமலை கண்டனம்

பூமி பூஜையில் பா.ஜ.,வினர்... பழிவாங்க கட்டுமானத்தை இடித்து தள்ளிய தி.மு.க., அரசு; அண்ணாமலை கண்டனம்

கோவை: பூமி பூஜையில் பா.ஜ.,வினர் பங்கேற்ற ஒரே காரணத்திற்காக, பாதி கட்டுமானப் பணிகள் முடிந்த கோவை சிங்காநல்லூர் புறக்காவல்நிலையத்தை கோவை தி.மு.க., மாநகராட்சி நிர்வாகம் இடித்து தள்ளிய விட்டதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சிங்காநல்லூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 53வது வார்டு மசக்காளிபாளையம் பகுதியில், சிங்காநல்லூர் (E1) காவல் நிலையத்தின் புறக்காவல் நிலையம் அமைக்க, பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, கோவை மாநகராட்சியின் அனுமதி பெற்று, கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அந்தப் பகுதி மாநகராட்சி உறுப்பினர் மோகன் அழைப்பின் பேரில், முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமி தலைமையில் பா.ஜ., நிர்வாகிகளும், மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட இந்த புறக்காவல் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் பாதிக்கும் மேல் நிறைவடைந்த நிலையில், பூமி பூஜை நடைபெற்ற போது, பா.ஜ.,வினர் கலந்துகொண்டனர் என்ற ஒரே காரணத்திற்காக, புறக்காவல் நிலையம் அமைக்கக் கொடுத்த அனுமதியை ரத்து செய்துவிட்டு, பொதுமக்கள் வரிப்பணத்தில் பாதிக்கும் மேல் நிறைவடைந்த கட்டுமானத்தை இடித்து தள்ளியிருக்கிறது கோவை தி.மு.க., மாநகராட்சி.புறக்காவல் நிலையம் அமைக்கப்படுவதாக இருந்த குறிப்பிட்ட அந்த இடத்தை, தி.மு.க.,வினருக்குத் தாரை வார்க்கும் எண்ணம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. பெருகி வரும் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த விரும்பாமலும், பா.ஜ., நிர்வாகிகளைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவும், பாதி கட்டப்பட்ட காவல்நிலையக் கட்டுமானத்தை இடித்து, பொதுமக்கள் வரிப்பணத்தை வீணடித்தும், சிங்காநல்லூர் புறக்காவல் நிலையத்தை அமைக்க விடாமல் தடுக்கும் தி.மு.க., அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக, அதே இடத்தில், புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

NAGARAJAN
டிச 19, 2024 08:53

லண்டன் ரிட்டர்ன்ஸ்


Mohamed Ibrahim
டிச 18, 2024 23:42

வாய்பில்லை சார்... இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு


GSR
டிச 18, 2024 22:05

இதை படிச்சப்போ எனக்கென்னவோ உத்தவ் டாக்ரே மும்பையில் கங்கண ராணாவட் கட்டிடத்தை இடித்து சாபம் வாங்கி கொண்டது நினைவிற்கு வந்தது.


Bala
டிச 18, 2024 21:51

இதுதான் திராவிட அராஜக மாடல்


Ramesh Sargam
டிச 18, 2024 20:54

கண்டனம் தெரிவித்தால் மட்டும் போதாது. பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
டிச 18, 2024 20:35

நீங்க சொல்லியது மாத்திரம் நிஜம் என்று நிரூபிக்கும் ஆதாரம் இருந்தா வெளியிடுங்க அண்ணாமலை சார் , இவர்களை குற்றவாளி கூண்டில் ஏற்றி அவர்களிடம் இருந்து பொதுமக்களின் பணத்தை நானே வாங்கி கட்டிடம் கட்டுகிறேன் அந்த கார்பொரேட் கட்சியினரின் சர்வாதிககாரத்தனம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது வேதனையை அதிகரிக்குது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை