உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லியில் நட்டாவை சந்தித்த பா.ஜ., நாகேந்திரன்

டில்லியில் நட்டாவை சந்தித்த பா.ஜ., நாகேந்திரன்

சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்தபோது, அவர் தன்னிடம் கூறிய விஷயங்களை, டில்லியில் நேற்று, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவிடம், மாநிலத் தலைவர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், நேற்று மாலை சென்னையில் இருந்து டில்லி சென்றார். பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான நட்டாவை நாகேந்திரன் சந்தித்து பேசினார். இது குறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அடுத்த மாதம் முதல், மாநிலம் முழுதும் நாகேந்திரன் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளார். இதை, தேசியத் தலைவர் நட்டாவிடம் தெரிவித்து, ஒப்புதல் பெற்றார் நாகேந்திரன். சேலத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து பேசியபோது, அவர் கூறிய விஷயங்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தலின்படி, வரும் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை முன்கூட்டியே உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
செப் 23, 2025 19:06

எதற்கு எடுத்தாலும் நட்டாவைக் கேட்க வேண்டும்,அமித்ஷாவைக் கேட்க வேண்டும் என்றால் இவர்கள் தமிழகத்தில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்ய இயலாது!


RRR
செப் 23, 2025 13:41

சந்திச்சு...??


Nathansamwi
செப் 23, 2025 08:51

இந்த ஆளு வேற அப்போ அப்போ சிரிப்பு காமிச்சிக்கிட்டு ....இப்டியே போனா இந்தவாட்டி பாஜக 1 சீட் ஜெயிக்கிறதே கஷ்டம் தான் போல ...


Sakthi
செப் 23, 2025 08:30

நாகேந்திரன் கூட்டத்துக்கு ஆள் அதிகம் சேராது. அண்ணாமலை ஒருவர் மட்டுமே தமிழகத்தில பிஜேபி ய வளர்க்க முடியும்