உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.பிரபலமான சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் அண்மையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் போராட்டம் ஒரு புறம், மாணவிகளின் மீதான பாதுகாப்பு பற்றிய கேள்விகள் ஒருபுறம் என சென்னை பல்கலைக்கழகம் பெரும் நெருக்கடிக்கு ஆளானது.கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் என சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விழிப்பாக இருக்கும் நிலையில், வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுததி இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.சம்பவ இடத்துக்கு மோப்பநாய்களை அழைத்துக் கொண்டு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். போலீசாரும் சோதனையில் இறங்கினர். பலமணி நேர சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படாத நிலையில் இது வெறும் மிரட்டல் என்பது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

jayvee
ஜன 04, 2025 18:25

தடயங்கள் காணாமல்போகும்


sankar iyer
ஜன 04, 2025 15:35

தடயங்களை அளிக்க முயற்சியா இருக்கலாம்


Nagarajan D
ஜன 04, 2025 14:53

மகளையே மணந்த ராமசாமி வாரிசுகளின் கைவரிசை தான் இது... ஒரு பிரச்னையை மறைக்க அதைவிட பெரிய பிரச்னையை கிளப்பிவிடுவது... வாழ்க நீதி துறை... தற்போதே அந்த மின்னஞ்சல் அனுப்பியவனுக்கு முன்ஜாமீன் கொடுத்துத்துடுங்க ஆபிசர்


தமிழன்
ஜன 04, 2025 14:23

பாதுகாப்பு பல்கலைக்கு இல்லையா?


தமிழன்
ஜன 04, 2025 14:03

சார் தான் யாரும் இல்லை என்று சென்னை கமிஷனர் சொல்லி விட்டாரே.. அப்புறம் எதற்கு குண்டு மிரட்டல்..


தமிழன்
ஜன 04, 2025 13:58

இன்னொரு சார் இல்லை என்று கமிஷனர் சார் சொல்லி விட்டாரே.. அப்புறம் எதற்கு இப்படி பயம் காட்டுறாங்க.. ? அது சரி இதற்கு கமிஷனர் என்ன சொல்ல போறாரு? மறுபடியும் பிரஸ் மீட் நடக்குமா?


தமிழன்
ஜன 04, 2025 13:56

இப்போ அந்த சார் அவராக தான் இருக்கும் என்று இன்னுமா உங்களால் சொல்ல முடியவில்லை


தமிழன்
ஜன 04, 2025 13:55

அந்த சாரை கண்டு பிடிக்க விடமாட்டாங்க போல


Ramesh Sargam
ஜன 04, 2025 12:46

விசாரணையை திசைதிருப்ப திமுகவினர் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்திருக்கலாம். கேடுகெட்டவர்கள் இந்த திமுகவினர்.


Perumal Pillai
ஜன 04, 2025 11:54

இது எந்த சாரோட வேலை ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை