உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:சென்னையில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் முக்கிய இடங்கள், பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்களின் வீடுகளுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது வழக்கமாகி விட்டது. முதல்வர் ஸ்டாலின் வீடு, நடிகர்கள் ரஜினி, அஜித், நடிகை த்ரிஷா உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.நேற்று கூட நடிகர்கள் சத்யராஜ், கார்த்திக், நாசர், அமீர் உள்ளிட்ட நடிகர்கள் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் வந்தது. இதையடுத்து, மோப்ப நாயுடன் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள், சோதனை நடத்தியதால், வெறும் புரளி என தெரியவந்தது.இந்த நிலையில், சென்னையில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் நேரில் சென்று சோதனை மேற்கொண்டனர். அதன்பிறகு, அது புரளி எனத் தெரிய வந்தது. தொடர்ந்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி