உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனை

விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் அனுப்பப்பட்டுள்ளதை அடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர்.வெடிகுண்டு மிரட்டல் இமெயிலில், விஜய் வீடு, நுங்கம்பாக்கம் இலங்கை துாதரகம், ஆயிரம் விளக்கில் உள்ள பிரிட்டன் துாதரக அலுவலகங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதால், அங்கும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் கூட்ட நெரிசலில் 40 பேர் பலியான சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இன்று காலை மாணவர் அமைப்பினர் விஜய் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இத்தகைய சூழ்நிலையில் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது அவரது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Thravisham
செப் 29, 2025 12:00

வித்தவுட் ரயில் கும்பலின் திருவிளையாடல்தான் இது. வெடிகுண்டு தேடுகிறேன் பேர்வழி என்று உள்ளேயே ரகசிய கேமேராக்கள் வைப்பார்கள்.


angbu ganesh
செப் 29, 2025 09:43

அணில் இப்பவும் ஒன்னும் கெட்டு போகல உனக்கு சினிமால செய்யற திருட்டுத்தனத்தை அரசியலில் செய்ய முடியாது சினிமால மறைமுகமா நீ என்னவென தில்லுமுல்லை செய்யலாம், ஆனா அரசியல் வெளிப்படை ரஜினி சொன்னதுதான் என்னுடைய சுயநலத்துக்காக மக்களை சாகடிக்க விரும்பாலேன்னு ஆனா நீ ரொம்ப சுயநலம் பிடிச்சவன்னு நிரூபிச்சிட்டே நாட்டை விட்டே போய்டு


Matt P
செப் 29, 2025 00:07

அரசியல்வாதிகளும் காட்டுமிராண்டி மக்களும் காட்டு மிராண்டி இன்னும் சிந்தித்து செயல்படும் நிலைக்கு வரலை சொன்னவன் தீர்க்கதரிசி. சின்னவனோ பெரியவநோ


Matt P
செப் 29, 2025 00:04

பத்து ரூபாய்ன்னு சொன்னான் என் புத்தியை காட்டிட்டேன் இப்படியும் இருக்கலாம்.


Ramesh Sargam
செப் 28, 2025 23:49

இவங்க செஞ்ச குற்றத்துக்காக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக்கூட அனுமதிக்க மாட்டாங்க போல தெரியுது. பக்கத்து மாநிலத்துக்கு சென்றுதான் தீபாவளி பண்டிகை கொண்டாடனும்.


Matt P
செப் 30, 2025 07:06

இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடாமலேயே தவிர்க்கலாம். நரகாசுரனை விட கொடியவர்கள் அரசியலில் நிறைந்து விட்டார்கள்


Prabu
செப் 28, 2025 22:57

கோல்மால்புரத்து முகவரியில் இருந்து இருக்கலாம் ...


Sun
செப் 28, 2025 22:49

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!


சாமானியன்
செப் 28, 2025 22:47

நம்பமுடியாது. இதுவும் திமுகவின் உள்ளடி வேலை.


rama adhavan
செப் 28, 2025 21:55

மற்றொரு சதி வீட்டை சோதனை செய்ய


Rajah
செப் 28, 2025 21:51

இந்த மாணவர் அமைப்பினர் இத்தனை காலமும் எங்கிருந்தனர்?


முக்கிய வீடியோ