உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐகோர்ட்டில் வெடிகுண்டு கைமாற்றம்; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஷாக் தகவல்

ஐகோர்ட்டில் வெடிகுண்டு கைமாற்றம்; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஷாக் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஐகோர்ட் வளாகத்திற்குள் கைமாற்றப்பட்டதாக போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c6ewc4sh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இச்சம்பவம் குறித்து விசாரித்த போலீசார், பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி, பிரபல ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 பேரை கைது செய்தனர். அதில் ரவுடி திருவேங்கடம் மற்றும் சீசிங் ராஜா போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட 28 பேர் மீதும், செம்பியம் காவல்நிலைய போலீசார் 4,832 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். என்கவுன்டர் செய்யப்பட்டவர்களை தவிர்த்து எஞ்சிய நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளின் விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்ற போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஐகோர்ட் வளாகத்திற்குள் கைமாற்றப்பட்டதாக போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.இதனைக் கேட்ட நீதிபதிகள், கோர்ட் வளாகத்தில் வெடிகுண்டு எப்படி கொண்டுவரப்பட்டது என்று கேள்வி எழுப்பியதுடன், இது தொடர்பாக தனியாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து மனுக்கள் மீதான விசாரணையையும் ஜன., முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

R.RAMACHANDRAN
டிச 12, 2024 08:35

இந்த நாட்டில் வழக்கறிஞ்சர்கள் குற்றவாளிகளுக்கு புகலிடம் அளிப்பவர்களாக இருக்கும் நிலையிலும் நீதிபதிகள் அவர்களை காப்பாற்றும் நிலையிலும் நீதிமன்றங்களின் வளாகத்தில் நடக்கும் குற்றங்களுக்காக ஆச்சர்யப்பட தேவை இல்லை.


ஆரூர் ரங்
டிச 11, 2024 21:52

வழக்கை திசைமாற்ற இது ஒரு சதி ஐடியாதானோ?ஏனெனில் உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்பு மத்திய CISF போலீஸ் பொறுப்பில் தான் உள்ளது.ஒரு உயர்நீதிமன்றத்துக்கு மத்திய போலீஸ் தேவைப்படும் அளவுக்கு அராஜக நிலைமை வேறெந்த மாநிலத்திலும் இல்லை.


Ramesh Sargam
டிச 11, 2024 20:18

ஐகோர்ட் வளாகத்திற்குள் வெடிகுண்டு பரிமாற்றமா? இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இன்னும் என்னவெல்லாம் பரிமாற்றங்களோ... அதான் போதைப்பொருள், துப்பாக்கி, etc., etc., etc.


இராம தாசன்
டிச 11, 2024 19:45

நீதி மன்றங்களுக்கு வருபவர்கள் எல்லாரையும் சோதனை செய்ய முடியாது என்று துணை முதல்வர் சொல்லுவார்


raja
டிச 11, 2024 19:07

ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலைக்கும் திராவிட கூட்டத்திற்கும் மற்றும் விசிக விற்கும் தொடர்பு இருக்கிறது அவர் எதிர்த்து அரசியல் செய்தது இந்த இரு இயக்கங்களைத்தான் ஆதலால் திராவிட கூட்டமும், விசிகவும் தான் இதற்க்கு முழு காரணம் இதை மறைக்கவே காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு என்னவெல்லாம் கதைக்காட்டுகிறார்கள்......


SIVA
டிச 11, 2024 18:56

என்ன விசாரிச்சு என்ன நடக்கபோகுது , கடைசியில் போதிய ஆதாரம் இல்லை என்று தீர்ப்பூ , அப்படியே தண்டனை கொடுத்தாலும் நன்னடத்தை மற்றும் கருணை மனு , பரோல் என்ற பல வழிகள் , பள்ளியில் படிக்கும் மாணவன் ரீல்ஸ் போடுகின்றான் ஏறுனா ரயிலு இறங்குனா ஜெயிலு இல்லனா பெயிலு என்று ......


ஆரூர் ரங்
டிச 11, 2024 18:39

சரியா பாருங்க. விடியல் ஆட்சியில் சிலிண்டர்தான்.


என்றும் இந்தியன்
டிச 11, 2024 17:29

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஐகோர்ட் வளாகத்திற்குள் போலீசாரால் கைமாற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இப்படி படித்தால் தான் திராவிட அறிவிலி மடியில் அரசில் உண்மையாக நடக்கும் நடவடிக்கை புரியும்


முக்கிய வீடியோ