உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரிசி மூட்டை போல புத்தக பை கொடுமைக்கு முடிவு கட்டணும்!

அரிசி மூட்டை போல புத்தக பை கொடுமைக்கு முடிவு கட்டணும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மாணவர்கள் தங்களுக்கு இணையான எடையுள்ள புத்தக பைகளை சுமந்து சொல்லும் கொடுமைக்கு, உடனே முடிவு கட்ட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்திஉள்ளார். அவரது அறிக்கை:அரிசி மூட்டைக்கு இணையான எடை உடைய புத்தக பைகளை, பள்ளி மாணவர்கள் சுமந்து செல்கின்றனர். சுமை துாக்கும் தொழிலாளர்களை போல, புத்தக பைகளை சுமந்து செல்லும் குழந்தைகள், காலப்போக்கில் முதுகு தண்டு வளைந்து, கூன் விழுந்தவர்களை போல மாறி விடுகின்றனர்.தமிழகத்தில் எந்த ஊரை, எந்த தெருவை எடுத்துக் கொண்டாலும், இத்தகைய மாணவர்களை பார்க்க முடியும். குழந்தைகளின் இந்த நிலைமைக்கு, பெற்றோரின் அறியாமையும், தனியார் பள்ளிகளின் பேராசையுமே காரணம்.எந்த பள்ளிகள் ஆங்கிலத்தில் கல்வி வழங்குகின்றனவோ; பாடச்சுமை அதிகமாக உள்ளதோ; அதுதான் சிறந்த பள்ளி என்ற மாயை தமிழகத்தில் உருவாக்கப்பட்டு விட்டது. அதிக எடை உடைய புத்தக பைகளை விட கொடுமை, அவற்றை சுமந்தபடி, 3 - 4 மாடிகள் ஏற வேண்டியிருப்பது தான். பள்ளிக்கு சென்று வந்தபின், முதுகுவலி, உடல்வலி போன்றவற்றால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால், அவர்களால் பள்ளிகளில் நடத்தப்பட்ட அன்றைய பாடங்களை படிப்பதோ, வீட்டுப்பாடம் செய்வதோ சாத்தியமாவதில்லை.தங்களுக்கு இணையான எடை உடைய புத்தக பைகளை, மாணவர்கள் சுமந்து சொல்லும் கொடுமைக்கு உடனே முடிவு கட்டவேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான, ஒரே எண்ணிக்கையிலான பாடநுால்கள் மட்டும் கற்பிக்கும் வகையில், மாநில கல்வி கொள்கையை தமிழக அரசு இறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sundaran manogaran
செப் 23, 2024 12:38

சரியாகச் சொன்னீர்கள் அய்யா கல்வி வியாபாரிகள் செய்யும் மோசடிகளை மக்கள் சகித்துக் கொண்டு இருப்பது கொடுமை.ஆசிரியர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்கப்படுவதாகக்கூறி கட்டண நிர்ணயம் செய்து விட்டு குறைந்த சம்பளம் கொடுக்கின்றனர்.ஆனால் பெற்றோர்களிடம் கூட்டம் கல்வி கட்டணம் வசூலிக்கின்றனர்.இப்படி அரசு ஆசிரியர் பெற்றோர் என அத்தனை பேரையும் ஏமாற்றும் இடத்தில் ஒழுக்கம் சார்ந்த கல்வி அளிக்கப்படுகிறது என்றால் எப்படி?


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
செப் 23, 2024 09:28

இந்த திருட்டுகளுக்கு அதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கும்? பாவம் பிஞ்சுகள். அவர்களின் எதிர்காலத்தை பற்றி சிறிதும் யோசிக்காத இந்த ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்த மக்களை அடிக்க வேண்டும்.


nisar ahmad
செப் 23, 2024 09:12

அதனால் அன்பு மணியை பிரதமராக்குங்கள்.


Barakat Ali
செப் 23, 2024 09:05

சி பி எஸ் சி திட்டத்தில் படித்த உங்கள் பேத்திமார்கள் இப்படியெல்லாம் சுமந்ததில்லையா ????


sridhar
செப் 23, 2024 08:20

இரண்டு செட் புத்தகங்கள் இருந்தால் ஒன்று வீட்டில் , ஒன்று பள்ளியில் வைக்கலாம் . நோட்புக் மட்டும் எடுத்து செல்லலாம் .


அப்பாவி
செப் 23, 2024 05:39

அதுமாதிரி படித்த மாணவர்கள் இன்னிக்கி அமெரிக்கா, ஐரோப்பான்னு பறந்து சென்று நல்ல வேலையில் இருக்காங்க. சமச்சீர் கல்வி மாணவர்கள் உள்ளூரில் அரசு வேலையில் சேர்ந்து ஆட்டையப் போடுகிறார்கள்.


Kasimani Baskaran
செப் 23, 2024 05:38

இபுக் ரீடர்கள் மூலம் இபுத்தகங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினால் சுமை ஏராளமாக குறையும். பாடநூல் நிறுவனம் புத்தகங்களை இப்புத்தகங்களாக வெளியிட வேண்டும். பயிற்சிகளை தாளில் எழுதி அதன் பின்னர் கோர்த்து வைத்துக்கொள்வது இன்னும் கூட சிரமத்தை குறைக்கும்.


புதிய வீடியோ