அமைச்சர் தங்கம் தென்னரசு எழுதிய நுால் வெளியீடு
சென்னை:தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எழுதிய, 'வரலாறு கூறும் தமிழ்நாட்டுக் காசுகள்' என்ற நுாலை, சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். நுாலின் முதல் பிரதியை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். இந்நுாலை, அமைச்சர் தங்கம் தென்னரசு, இரண்டு பாகங்களாக எழுதி உள்ளார். அந்த நுாலை உருவாக்கும் பணியில், நாணய ஆராய்ச்சியாளர் ஆறுமுக சீதாராமன், இணை ஆசிரியராக செயல்பட்டுள்ளார்.