உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பிராமணர் சங்கத்தினர் மனு

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பிராமணர் சங்கத்தினர் மனு

சென்னை:தமிழக பிராமணர் சங்கம் சார்பில், மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்: முற்பட்ட சமுதாயத்தில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், 10 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், தக்கார் நியமனத்தில் பிராமண சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் டி.என்.பி.எஸ்.சி., போன்ற அரசு தேர்வுகள், வேலை வாய்ப்புகளில், முற்பட்ட சமூகத்தினருக்கான வயது வரம்பை, 32லிருந்து 35 ஆக உயர்த்த வேண்டும்  ஊடகம், பத்திரிகைகளில், பிராமண சமூகத்தின் பழக்க வழக்கங்களை, மத நம்பிக்கையை இழிவு படுத்துபவர்கள் மீது, சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக வெறுப்பூட்டும் பேச்சுக்களை தடை செய்ய வேண்டும் தமிழக தொழில் வளர்ச்சிக்காக பாடுபட்டு, நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மறைந்த ஆர்.வெங்கட்ராமனின் நுாற்றாண்டு விழா நினைவாக, அம்பத்துார் கிண்டி தொழிற்பேட்டையில் திருஉருவச்சிலை நிறுவ வேண்டும் கும்பகோணம் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், பொது நல சேவகரும், பிராமணர் சங்க நிறுவனர்களில் ஒருவருமான, காசிராமன் நினைவை முன்னிட்டு, அவரின் உருவச்சிலையை கும்பகோணத்தில் நிறுவ அனுமதி தர வேண்டும்.இவ்வாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.இந்நிகழ்வின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, பிராமணர் சங்க மாநில பொருளாளர் ஜெயராமன், மாநில இளைஞரணி செயலர் பிரகாஷ், துணை பொதுச்செயலர் பார்த்தசாரதி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலர் ராஜகோபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Indian
நவ 30, 2024 14:18

அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும் நல்லாட்சி தமிழ் நாட்டில் உள்ளது ,..


Babu
நவ 29, 2024 09:35

பிராமண எதிர்ப்பை முன்னின்று நடத்தும் தத்தி முதல்வனிடமே சென்று, நமக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை பற்றி மனு அளித்தால் அவன் நமக்கு ஆதரவாக செயல்படுவான் என்று நினைக்கிறீர்களா? நாம் அனைவரும் ஒன்று பட்டிருந்தால், நிச்சயமாக சிதம்பரம், மயிலாப்பூர், ஸ்ரீரங்கம், ஆலந்தூர், போன்ற தொகுதிகளில் திராவிட கட்சிகள் & கூட்டணி வெற்றி பெற்றிருக்க முடியாது. நம்முடைய ஒற்றுமையை அதிகரிக்கப் பாருங்கள். பிராமண சங்கத்தில் திராவிட கட்சிகளுக்கு ஆதரவாக நடக்கும் நபர்களை நீக்குங்கள்.


எஸ் எஸ்
நவ 29, 2024 14:39

கொடுத்ததால் எந்த பயனும் இருக்காது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் வெறுமே அறிக்கைகள், சோசியல் மீடியா பதிவுகள் என்று இல்லாமல் இம்மாதிரி களத்தில் இறங்கி முதல்வரை சந்தித்தது ஒரு வகையில் வரவேற்கத்தக்கது.


Prasad
நவ 29, 2024 08:08

they not supporting


புதிய வீடியோ