உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நோயாளிகளுக்கு ரொட்டி, பால் 

 நோயாளிகளுக்கு ரொட்டி, பால் 

அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு, காலை உணவாக இட்லி, பொங்கல், உப்புமா, பால், வாழைப்பழம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மதிய உணவாக சாதம், சாம்பார், கூட்டு பொரியல், முட்டையும், இரவு உணவாக சாதம், கூட்டு, சாம்பாரும் வழங்கப்பட்டு வந்தது. வணிக பயன்பாடு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், நோயாளிகளுக்கு தடையின்றி உணவு வழங்க, மருத்துவமனைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன்படி, நோயாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, அரசு மருத்துவமனைகளில் காலை உணவாக இட்லி, பொங்கலுக்கு பதிலாக, ரொட்டி, பால் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமே, இட்லி, பொங்கல் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ