உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் வாரியத்தில் 265 பேர் மீது லஞ்ச புகார் நிலுவை

மின் வாரியத்தில் 265 பேர் மீது லஞ்ச புகார் நிலுவை

சென்னை: தமிழக மின் வாரியத்தில், பல்வேறு பதவிகளில் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். புதிய மின் இணைப்பு வழங்குவது, மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வது உள்ளிட்ட சேவைகளை செய்து தர, சிலர் விண்ணப்பதாரர்களிடம் லஞ்சம் கேட்கின்றனர். இதுதவிர, குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட லஞ்சம் வாங்குவது, உறவினர்கள் பெயரில் ஒப்பந்த பணிகளை எடுப்பது உள்ளிட்ட முறைகேடுகள் நடக்கின்றன. லஞ்சம் தர மறுப்போர் புகார் அளித்தால், லஞ்சம் வாங்கும் நபர்கள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதுவரை, 265 ஊழியர்கள் மீது லஞ்ச புகார் விசாரணை நிலுவையில் இருப்பதும், 83 பேர் மீது துறை ரீதியான விசாரணை முடிக்கப்பட்டு, நடவடிக்கை நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !