உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டா மாற்றம் செய்ய லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் துணை தாசில்தார்!

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் துணை தாசில்தார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மயிலாடுதுறை: பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மண்டல துணை தாசில்தார் மற்றும் கம்ப்யூட்டர் ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம், கோவில்பத்து தாடாளன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர், 59. இவர், தன் தாய் பெயரில் உள்ள பட்டாவை தன் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக, சீர்காழி தாலுாகா அலுவலகத்தில் உள்ள மண்டல துணை தாசில்தார் தேவகியை சந்தித்து மனு அளித்துள்ளார். தேவகி 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ohjiwhzt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அலெக்சாண்டர் மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தலின்படி, பணத்தை அலெக்சாண்டர் நேற்று மதியம் அலுவலகத்தில் இருந்த தேவகியிடம் கொடுத்தார். அந்த பணத்தை, அலுவலகத்தில் இருந்த தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் டெல்பி வாங்கினார்.அங்கிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டெல்பி மற்றும் தேவகி இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

K.Ramakrishnan
ஜூன் 15, 2025 21:19

லஞ்சம் வாங்கியவர்கள் எல்லாம் ஓசைப்படாமல் மீண்டும் பணியில் சேர்வது எப்படி என்றே தெரியவில்லை.பிடிபட்டவர்களை உடனே பணிநீக்கம் செய்து பணப்பயன்களையும் ரத்து செய்ய வேண்டும்.


Muniappan
ஜூன் 14, 2025 16:42

செங்கல்பட்டு மண்டலத்தில் வீட்டுவசதி துனணப்பதிவாளராக உள்ள சங்கிலி என்பவர் என்.ஓ.சி. வழங்க சங்க உறுப்பினர்களிடம் இருந்து இலட்சத்தில் பணத்தை பெற்றுக் கொண்டுதான் வழங்குகிறார் இதில் ஓய்வு பெற்ற நீதிபதியிடம் கூட கறராக பெற்றுள்ளார் என்பதோடு இன்னும் சில மாதங்கள் இம்மணடலத்தில் பணிபரிந்தால் வீட்டுவசதி என்ற துறையை காணாமல் செய்துவிடுவார். சங்கங்களையும் பணியாளர்களையும் ஆண்டவன் தான் காப்பாற்றும்.


N Ganapathy subramanian
ஜூன் 14, 2025 15:38

Go to Guindy tasildar office zone13. அங்கே வாய்க்கரிசி இல்லாம எதும் நடக்காது. எல் எச் ஸி கூட லஞ்சம் வாங்கிக் கொண்டு தப்பு தப்பா தருவாங்க .


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 14, 2025 14:08

சமீபத்தில் ஒரு பெண் ஆண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ எடுத்து வைத்து கொண்டு ஆண்களை மிரட்டி பணம் பறித்தார் என்ற செய்தி இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறைகளிலும்.


RAMESH
ஜூன் 14, 2025 13:47

இது என்ன அதிசயம்.... டாஸ்மாக் கடையில் குவார்ட்டர் க்கு பத்து ருபா அதிகம் கேட்டு வாங்குகிறார்கள்..... லஞ்சம் ஒழிப்பு போலிஸ் அவர்களை கைது செய்யுமா


D Natarajan
ஜூன் 14, 2025 12:45

கையும் களவுமாக பிடிபட்டவுடன் உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். விடியல் அரசு செய்யுமா


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 14, 2025 11:18

விமான விபத்து உட்பட பல நிகழ்வுகள் வாழ்வின் நிலையாமையை உணர்த்தினாலும் .......


David DS
ஜூன் 14, 2025 10:42

தூத்துக்குடி டிஸ்டிரிக்ட், கோவில்பட்டி தாலுகாவில், பரமசிவன் என்ற வி.ஏ.ஓ மது குடித்து விட்டு தான் தினமும் ஆபீஸ் வருவார். லஞ்சம் வாங்காமல் எதுவும் செய்யறதே இல்லை . லஞ்ச ஒழிப்பு டிப்பார்ட்மென்டுக்கு பெட்டிஷன் போட்டாலும் நோ யூஸ்.


lana
ஜூன் 14, 2025 10:40

அது தான் குருமா., வே சொல்லி விட்டார். லஞ்சம் இருக்க தான் செய்யும் என்று. அவருக்கு சாதாரண பொதுமக்கள் லஞ்சம் மூலம் எவ்வளவு கஷ்டம் படுகிறார்கள் என்பதை விட bjp உள்ளே வர கூடாது என்பது தான் முக்கியம்.


nagendhiran
ஜூன் 14, 2025 09:48

கையும் களவுமாக சிக்கிய பின் முழுமையான பணி நீக்கமே இத்தவறுகளை நிறுத்தும் உடன் தண்டனை? மற்றும் கடுமையான தண்டனையே குற்றங்களை தடுக்க இயலும்?