லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே? (24)
அரசுத்துறைகளில் நீக்கமற நிறைந்திருக்கிறது லஞ்சம். துறைவாரியாக, ஒவ்வொரு பணிக்கும் குறைந்தபட்ச லஞ்சத் தொகை உண்டு. அந்தத் தொகையும் மாறுதலுக்கு உட்பட்டது. பணியின் அவசரம், மதிப்பு, சிக்கலைப் பொறுத்து, லஞ்ச தொகை மாறுபடும். மக்கள் அதிகம் செல்லும் சில அலுவலகங்களில், இன்றைய லஞ்ச மார்க்கெட் நிலவரத்தைப் பார்ப்போம்…...லஞ்சத்தின் ஆட்சி! பறிக்கும் மாநகராட்சி
தமிழகம் முழுவதும் மாநகராட்சி மற்றும் நகர ஊரமைப்பு துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்சம் தாண்டவமாடுகிறது. அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு இடத்துக்கு ஏற்ப லஞ்சத்தொகை மாறும். இருப்பினும் இங்கே குறைந்தபட்ச 'லஞ்ச மார்க்கெட்' நிலவரத்தை மட்டுமே குறிப்பிடுகிறோம். விண்ணப்பதாரர்களின் பணபலத்தை பொறுத்தும் அதிகாரிகளின் 'வேட்டையை' பொறுத்தும் இத்தொகை மாறுபடக்கூடும்.இந்த வேலை - இன்ன ரேட் (ரூபாயில்)
வரைபட அனுமதி (ச.அடி) - 60-100வர்த்தக நிறுவனங்கள் (ச.அடி) - 80அடுக்குமாடி குடியிருப்பு (ச.அடி) - 100நில உபயோகம் வகைமாற்றம் (ஏக்கருக்கு) - 3 - 5 லட்சம் வரைநில அளவை பதிவேடு நகல் பெற - 2,000 - 3,000சர்வேயர் அறிக்கை - 10,000பட்டா பெயர் மாறுதலுக்கு - வி.ஏ.ஓ., அலுவலகம்; 5,000. தாலுகா அலுவலகம்; 5,000-10,000.மாநகராட்சியில் - வரைபட அனுமதி (ச.அடி); 20. வர்த்தக நிறுவனம் (ச.அடி); 35.சொத்து வரி (ச.அடி) - 50சொத்து வரி பெயர் மாற்றம் - 5,000லே-அவுட் அப்ரூவலுக்கு (ஏக்கருக்கு) - 6,00,000குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு - 50,000பிறப்பு, இறப்பு சான்று - 2,000தொழில் உரிமம் - 2,000 - 5,000(சமீபகாலமாக, கவுன்சிலர்களுக்காக ஒரு தொகை விண்ணப்பதாரர்களிடம் வசூலித்துக் கொடுக்க, மாநகராட்சி அலுவலர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது)லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள், மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையிடம் புகார் அளிக்கலாம்.
கோவை
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு,எண் 4, ராமசாமி நகர் முதல் வீதி,தீயணைப்பு நிலையம் அருகில்,கவுண்டம்பாளையம்,கோவை - 641 030.போன்: 0422 -244 9550,வாட்ஸ்அப்: 95977 87550
திருப்பூர்
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு,40, ஆஷர் நகர்,இரண்டாவது வீதி,அவிநாசி ரோடு, திருப்பூர் - 641 603.போன் எண்: 0421 248 2816. டி.எஸ்.பி.,: 94450 48880 இன்ஸ்பெக்டர் : 94981 02078, 83000 46708.
நீலகிரி
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு,கோத்தகிரி சாலை,மதுவானா சந்திப்பு,ஊட்டி, நீலகிரி. போன்: 0423- 2443962. இன்ஸ்பெக்டர்: 94981 76712.தொடரும்...