உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்களுக்கு தடையின்மை சான்று வழங்க லஞ்சம் வசூல்: தலைமை ஆசிரியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்களுக்கு தடையின்மை சான்று வழங்க லஞ்சம் வசூல்: தலைமை ஆசிரியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

மானாமதுரை: தமிழகத்தில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்களுக்கு தடையின்மை சான்று வழங்க பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக தலைமை ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பணி ஓய்வு பெறும் போது அவர்கள் பணிக்காலத்தில் நிதி சம்பந்தமான வரவு செலவுகள் மற்றும் மாணவர்களுக்கு அரசு சார்ந்த நலத்திட்டங்கள், மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு கட்டணங்கள் ஆகியவை பற்றி தணிக்கை செய்யப்பட்ட தடையில்லா சான்று சென்னையில் உள்ள தலைமை தணிக்கை அலுவலகத்தால் வழங்கப்படுகிறது.இந்த சான்றுக்கு பணி ஓய்வு பெறும் ஒவ்வொரு தலைமை ஆசிரியரிடம் அவர்கள் பணிபுரிந்த வருடத்திற்கு ஏற்ப 3 ஆயிரம் வரை லஞ்சமாக வசூலிக்கப்படுவதாக தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க அமைப்பு செயலாளர் சேவியர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்களுக்கு தடையின்மை சான்று வழங்க ஒவ்வொரு மண்டலத்திலும் தலைமை தணிக்கை அலுவலகம் செயல்பட்டு வந்தது.கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இந்த அலுவலகங்கள் மொத்தமாக கலைக்கப்பட்டு தற்போது சென்னையில் செயல்பட்டு வருகிறது.ஓய்வு பெற உள்ள தலைமை ஆசிரியர்கள் தடையின்மை சான்று வாங்குவதற்காக இந்த அலுவலகத்திற்கு சென்றால் அவர்களது நிதி வரவு, செலவு எந்தவித தவறும் இல்லாமல் சரியாக இருந்தாலும் ஒரு வருடத்திற்கு ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரம் வரை லஞ்சமாக கேட்கின்றனர்.ஒரு தலைமை ஆசிரியர் 10 வருடங்களாக தலைமை ஆசிரியராக பணியாற்றி இருந்தால் அவரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சமாக கேட்கின்றனர். ஒரு சில தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெறும் நிலையில் பணப்பலன்களை உடனடியாக வாங்க வேண்டும் என்பதற்காக லஞ்சத்தை கொடுத்து தடையில்லா சான்று பெற்று வருகின்றனர்.கொடுக்காத தலைமை ஆசிரியர்களுக்கு தடையின்மை சான்று வழங்க தாமதப்படுத்தி வருகின்றனர். ஆகவே பள்ளி கல்வித்துறை அமைச்சர், தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நலன்களுக்காக பாடுபட்ட தலைமை ஆசிரியர்கள் மன நிம்மதியுடன் ஓய்வு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

RADHAKRISHNAN
மார் 15, 2025 13:06

இதை விட கொடுமை கருவூழகத்தில் மிகப்பெறிய லஞ்சப்பேய்கள் உள்ளது முதலில் அவர்களை ஒழித்து கட்ட வேண்டும், லஞ்சம் வாங்கும் பேய்களின் குடும்பத்தாரில் யாருக்கும் அரசு வேலை வழங்கக்கூடாது .


Anantharaman Srinivasan
மார் 09, 2025 17:58

திமுக. அதிமுகாவை ஒழிக்க அடுத்ததாக விஜய் கட்சிக்கு ஓட்டு போட்டு ஏமாறலாமா..??


Raghavan
மார் 09, 2025 12:24

உங்க ஆளுங்க எவ்வளவு தேர்தல்களில் தில்லு முள்ளு செய்து இவங்க ஆட்சியை வெற்றிபெற வைத்திருப்பீர்கள். அதற்க்கெல்லாம் இப்போதுதான் கடவுள் உங்களை பழிவாங்குகிறார். ஒரு வருடத்துக்கு 5 ஆயிரம் கேட்கவேண்டும். இப்போது தெரிகிறதா பெருந்தலைவர் காமராஜ் ஆட்சியை ஒழித்துவிட்டு இவர்களை அரியணையில் ஏற்றியதற்கு உங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.


sridhar
மார் 09, 2025 12:42

குறிப்பா , இவங்க தேர்தல் பூத்தில் உட்கார்ந்துகொண்டு அப்பாவி வாக்காளர்களை evm கருவியில் திமுகவுக்கு வோட்டு போட வைத்தார்கள் , இப்போ அழுறாங்க .


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 10, 2025 09:10

ஹீதர் கூறியது முற்றிலும் உண்மை உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறில்லை. இந்த அரசு பள்ளி ஆசிரியர்களால் தான் திமுக அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து தமிழகத்தை நாசம் செய்து விட்டனர். இதில் கொடுமை என்னவென்றால் வருடா வருடம் தேர்தல் கமிஷன் நடத்தும் வாக்காளர்கள் சேர்ப்பது நீக்குவதில் இந்த ஆசிரியர்கள் அட்டூழியம் அதிகம். இவர்களுக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாகத் தான் அனைத்தும் செய்வார்கள். இருபது இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்பே கோவையில் திருச்சி ரோட்டில் நகருக்கு நடுவில் முக்கிய இடத்தில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் தினமும் பள்ளிக்கு வந்த பின்னர் பள்ளிக்கு அருகில் உள்ள பூயூட்டி பார்லர் சென்று முக அலங்காரம் செய்த பின் தான் பணியை தொடங்குவார்.


Ramesh Sargam
மார் 09, 2025 11:27

என்றைக்கு லஞ்சம் இல்லாத தமிழகத்தை நாம் காண்போம்? திமுக, அதிமுக இரண்டும் ஒழிந்தால் அதற்கு ஓரளவு வாய்ப்பு இருக்கிறது.


M S RAGHUNATHAN
மார் 09, 2025 11:14

எங்கே அந்த "திறமையான" பள்ளி கல்வித் துறை மந்தி. இது அவர் ஏரியா தானே ? ஒருவேளை அவர்தான் வாங்கச் சொல்லி வாய்மொழி உத்தரவு போட்டு இருப்பாரோ ? வேலை வாங்க, மாற்றல் வாங்க கொடுத்த இலஞ்சப் பணம் போதாமல் ஓய்வு பெற்று செல்லும்போதும் கொடுக்க வேண்டுமா ? இதை " facilitation ges " என்று கல்வி அமைச்சர் சொன்னாலும் சொல்வார்.


S. Gopalakrishnan
மார் 09, 2025 11:09

தலைமை ஆசிரியர்களிடம் லஞ்சம் வாங்குவது தவறுதான். ஆனால் இந்த நபரைப் பார்த்தால் திரு. ஆர் எஸ். மனோகர் போல தெரிகிறது. ஆசிரியருக்கு உண்டான மரியாதை இவரைப் பார்க்கும் போது வர மாட்டேன் என்கிறது !


தமிழ்வேள்
மார் 09, 2025 13:35

ஆர்.எஸ்.மனோகரிடம் உன்னதமான கலை இருந்தது...ஆனால் இவன் ஒரு பாவமன்னிப்பு பாதிரி அடிமை டிக்கெட்..


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 09, 2025 10:58

எப்படியும் ஒருவர் தலைமை ஆசிரியராக பத்து ஆண்டு காலமாவது பணியில் இருப்பார். மொத்தம் முப்பது ஆண்டு பணி என்று எடுத்துக்கொண்டாலும், ஒவ்வொருமுறை இட மாறுதலில் செல்லும்போதும், அடுத்த இடத்துக்கு செல்லும் முன் இந்த இடத்தில் அந்த சான்றிதழைப் பெற்றுக்கொண்டால் என்ன ? மற்ற துறைகளில் இவ்வாறு தானே இருக்கின்றது. இவர்களுக்கு மட்டும் ஓய்வு பெறும்போது மொத்தமாக சான்றிதழ் பெறுவானேன்? ஓஹோ டியூஷன் ல சம்பாதிச்ச காசெல்லாம் கொடுக்கற அல்லது பிடுங்கற வழியா?


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 09, 2025 10:55

இவர்கள் படும் இன்னலைக்கண்டு பெருமையாக இருக்கிறது. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் குறள் படிதான் நடக்கின்றது. பதவியில் இருக்கும்போது மக்கள் எப்படி கஷ்டப்பட்டால் என்ன என்று இவர்கள் அப்பா ஆட்சிக்கு தீவிரமாக முறைகேடாக வெல்வதற்கு உதவி செய்து ஜனநாயகத்தையே தோற்கடிக்கின்றனர். இப்போது அதே அப்பாவினால் அவதிப்படுகின்றனர். மக்களின் சாபம் வீணாவதில்லை


Svs Yaadum oore
மார் 09, 2025 10:46

ஒரு வருடத்திற்கு ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரம் வரை லஞ்சமாக கேட்கின்றனராம் .. ஒரு தலைமை ஆசிரியர் 10 வருடங்களாக தலைமை ஆசிரியராக பணியாற்றி இருந்தால் அவரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சமாக கேட்கின்றனராம் ......கணக்கு பார்த்துதான் லஞ்சம் வாங்குகிறார்கள் ....லஞ்சம் வாங்குவதிலும் ஒரு நேர்மை வேணுமில்லை?? ....திராவிடனுங்க தொழிலில் நேர்மையை எப்போதும் விட்டு கொடுக்க மாட்டார்கள் ...


RAMAKRISHNAN NATESAN
மார் 09, 2025 10:14

அப்போ, பொதுஜனம் கொடுத்தா மட்டும் பரவால்லியா ?


புதிய வீடியோ