உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பி.எஸ்., ஏரோநாட்டிக்கல், பொருளாதாரம் படிப்புகள் சென்னை ஐ.ஐ.டி.,யில் விரைவில் அறிமுகம்

பி.எஸ்., ஏரோநாட்டிக்கல், பொருளாதாரம் படிப்புகள் சென்னை ஐ.ஐ.டி.,யில் விரைவில் அறிமுகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில், பி.எஸ்., ஏரோநாட்டிக்கல் மற்றும் பி.எஸ்., பொருளாதாரம் என்ற இரண்டு பு திய, 'ஆன்லைன்' படிப்புகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.இதுதொடர்பாக, சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குநர் காமகோடி நேற்று அளித்த பேட்டி:என்.ஐ.ஆர்.எப்., எனும் தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில், ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து ஏழாவது முறையாக, சென்னை ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.ஊக்குவிப்பு திட்டம் இந்த தரவரிசை பட்டியலை, அரசே தயார் செய்வது நம் நாட்டில் மட்டும் தான். அத்துடன், வெளிப்படை தன்மையுடன் வடிவமைக்கப்படுகிறது.பிரதமர் மோடி அறிவித்துள்ள, 'விக்சித் பாரத் 2047' நோக்கி, சென்னை ஐ.ஐ.டி., தன் பயணத்தை துவக்கி உள்ளது.புதுமை மற்றும் தொழில்முனைவுக்கு முக்கியத்துவம் வழங்குகிறோம்.கடந்த ஆண்டு, 100 'ஸ்டார்ட்அப்' நிறு வனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு வழங்கப்பட்டது. ஒரு நாடு வல்லரசாக வேண்டுமெனில், புதிய கண்டுபிடிப்பு களுக்கான உரிமம், அந்த நாட்டைச் சேர்ந்த குடி மகன்களுக்கு உடையதாக இருக்க வேண்டும். இதற்காக, ஊக்குவிப்பு திட்டம் ஒன்றை விரைவில் துவங்க உள்ளோம்.தமிழகத்தில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை, 49 முதல் 50 சதவீதமாக உள்ளது. அதேநேரம், தேசிய அளவில், 27 முதல் 28 சதவீதமாக இருக்கிறது. தேசிய அளவில் உயர் கல்வியின் சேர்க்கையை, 2035ம் ஆண்டுக்குள், 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்.இதற்காக, 'வித்யா சக்தி' என்ற திட்டத்தை, மூன்று ஆண்டுகளுக்கு முன் துவக்கினோம்; 5,000 மையங்கள் வழியாக, 'ஆன்லைன்' கல்வி கற்பிக்கப்பட்டது. இதுவரை, 5 லட்சம் மாணவ -- மாணவியருக்கு கல்வி வழங்கப்பட்டு உள்ளது.ஆன்லைன் படிப்பு இதை, 40,000 மையங்களாக உ யர்த்தினால், ஒரு கோடி மாணவர்கள் என்ற இலக்கை அடைய முடியும்.சென்னை ஐ.ஐ.டி., துவங்கிய பி.எஸ்., 'ஆன்லைன்' படிப்புகளில், 50,000 மாணவர்கள் படிக்கின்றனர். தற்போது, பி.எஸ்., டேட்டா சயின்ஸ், பி.எஸ்., எல்ட்ரானிக்ஸ் சிஸ்டம் போன்ற படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.விரைவில், பி.எஸ்., ஏரோநாட்டிக்கல் மற்றும் பி.எஸ்., பொருளாதாரம் என்ற, இரண்டு புதிய ஆன்லைன் படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கல்வி தரத்தில் சமரசம் இல்லை

'சென்னை ஐ.ஐ.டி., வழங்கும் பி.எஸ்., ஆன்லைன் படிப்புகளின் தரம் குறித்து, கேள்வி எழுப்பப்படுகிறதே' என்ற கேள்விக்கு காமகோடி அளித்த பதில்:சென்னை ஐ.ஐ.டி., என்றைக்கும் தரம் குறைவான படிப்புகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்காது. பி.எஸ்., டேட்டா சயின்ஸ் மற்றும் பி.எஸ்., எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் படிப்புகள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை; வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.இந்த பாடங்களை எடுத்து படித்தால், அவற்றின் தரம் தெரியும். நுழைவுத் தேர்வில் பங்கேற்று படிப்பில் இணைந்தாலும், வெளியே செல்வது கடினம்.கடந்த ஆண்டு, 'கேட்' நுழைவுத் தேர்வு முடிவில், முதல் 10 இடங்களில், பி.எஸ்., டேட்டா சயின்ஸ் படித்த மாணவர்கள் இடம் பெற்றனர்.சென்னை ஐ.ஐ.டி., வழங்கும் மற்ற படிப்புகளுக்கு நிகராக, இந்த ஆன்லைன் படிப்புகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை