உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புல்லட் ஸ்பெஷலிஸ்ட் திருடர்கள் கைது; 8 புல்லட் பறிமுதல்!

புல்லட் ஸ்பெஷலிஸ்ட் திருடர்கள் கைது; 8 புல்லட் பறிமுதல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டுக்கல்:புல்லட் திருடுவதில் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயர் பெற்ற கரூரை சேர்ந்த வாலிபர்கள் இருவரை, திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 புல்லட் உட்பட 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.திண்டுக்கல் மாவட்டத்தில் புல்லட் டூவீலர் திருடுபோவதாக அடிக்கடி புகார்கள் வந்தன. எஸ்.பி., பிரதீப் உத்தரவில் நகர் குற்றப்பிரிவு எஸ்.ஐ.,வீரபாண்டி தலைமையிலான போலீசார் நகர் முழுவதும் உள்ள சி.சி.டி.வி.,காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 வாலிபர்கள் புல்லட் டூவீலர்களை மட்டும் திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த வாலிபர்கள் பயன்படுத்திய அலைபேசி எண்களை வைத்து போலீசார் பின் தொடர்ந்த நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது கரூர் ராயனுாரை சேர்ந்த ஹரிஹரன் 23, கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த பிரசாந்த், 25 என்பதும் தெரிந்தது. போலீசார் இன்று கரூர் சென்று இருவரையும் கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த 8 புல்லட் உட்பட 10 டூவிலர்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டூவீலர் திருட்டு வழக்குகள் இருப்பதும் இருவரும் புல்லட் டூவீலர்களை மட்டும் குறிவைத்து திருடுவதும் விசாரணையில் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Karthik
மார் 02, 2025 21:44

யோசிச்சு பாத்தேன் . நீங்கள் சொல்றதும் உண்மைதான்னு தோணுது. அப்படீன்னா எங்கோ குறைபாடு இருக்கு..


Ganapathy
மார் 02, 2025 20:48

அதாவது குற்றவாளிகள் முஸ்லீம்களா இருந்தாக்க "மர்ம நபர்கள் பைக்கை திருடினார்கள்" அப்டீன்னு செய்தி வரும். இல்லேன்னா அவங்களுடைய ரேஷன் அட்டை ஆதார் அட்டை வீட்ல இருக்கிறவங்க விபரம் அப்புறம் அவங்களுடைய ஆறுமாச குழந்தையா இருந்தப்ப எடுத்த போட்டோ அவங்களுடைய சித்தப்பா தாத்தா போட்டோ ராசி நட்சத்திரம் நேத்திக்கி சாப்பாடு தின்ன விபரம்ன்னு ரொம்ப விலாவாரியாக செய்தி வரும்.


Krishnamurthy Venkatesan
மார் 02, 2025 20:03

உடல் உழைப்பை மறந்த இவர்கள் எளிதில் பணம் சம்பாதிக்க நினைத்ததால் கம்பி என்னும் நிலைமை. இத்தகையோரை அவர்களின் பெற்றோரே/ நண்பர்களே காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.


Barakat Ali
மார் 02, 2025 19:49

துக்ளக்காருக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல அவரை மதுரைக்காரர் சந்தித்தார் .....


சமீபத்திய செய்தி