உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில்; மைசூர் வரை செல்லலாம்!

சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில்; மைசூர் வரை செல்லலாம்!

சென்னை: நாட்டின் 2வது புல்லட் ரயில் சென்னை - மைசூரு இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் 2026ல் முதல் புல்லட் ரயில் இயக்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மும்பை முதல் ஆமதாபாத் வரையிலான வழித்தடத்தில் முதல் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதற்குள் அடுத்த புல்லட் ரயில் குறித்த சிறப்பான செய்தி வெளியாகியுள்ளது. நாட்டின் 2வது புல்லட் ரயில் வழித்தடத்தில் தமிழகமும் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை - மைசூர் இடையே இந்த 2வது புல்லட் ரயில் திட்டம் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான 'ரூட் மேப்' தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 435 கி.மீ தூரத்தை கொண்டுள்ள இந்த வழித்தடத்தில் இயக்க திட்டமிட்டுள்ள புல்லட் ரயில் அதிகபட்சம் 350 கி.மீ வேகத்தில் இயங்கும் எனக் கூறப்படுகிறது. சென்னை, பெங்களூர், மைசூர் என முக்கியமான 9 நிறுத்தங்களை கொண்டுள்ளது. விரைவில் இதற்கான செயல்திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்த உள்ளது.

திட்டத்தின் முக்கிய விபரங்கள்:

* மொத்த தூரம்: 435 கி.மீ., * அதிகபட்ச வேகம்: 350 கி.மீ.,* செயல்பாட்டு வேகம்: மணிக்கு 320 கி.மீ.,* சராசரி வேகம்: 250 கி.மீ., * ட்ராக் கேஜ்: ஸ்டாண்டர்ட் கேஜ் - 1435 மி.மீ., * சிக்னலிங்: DS-ATC* ரயில் திறன்: 750 பயணிகள்* இழுவை: 25 KV AC மேல்நிலை கேடனரி(OHE)* பாதுகாப்பு: பூகம்பம் ஏற்பட்டால் தானாக நிற்கும்; நிலநடுக்கம் கண்டறிதல் மற்றும் எச்சரிக்கை அமைப்பு(யுரேடாஸ்) கொண்டது* பாதை: சென்னை - மைசூர் எச்.எஸ்.ஆர்.,* நிலையங்களின் எண்ணிக்கை: 9* நிலையத்தின் பெயர்கள்: சென்னை, பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், பங்காரப்பேட்டை, பெங்களூரு, சென்னபட்னா, மாண்டியா மற்றும் மைசூரு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

kijan
ஜன 17, 2024 02:36

சென்னை - பெங்களூரு - செகந்திராபாத் - புனே - மும்பை - அஹமதாபாத் - ஜெய்ப்பூர் - டெல்லி .... என்று வழித்தடம் இருந்தால் தான் லாபம் பார்க்க முடியும்..... மைசூருக்கெல்லாம் வந்தே பார்த்தே காலியாக செல்கிறது.....இந்தோனேசிய புல்லட் ரயில் போல .... மூன்று வகுப்புகள் வேண்டும்.... முதல் வகுப்பு (வரிசைக்கு மூன்று சீட்கள்), பிசினஸ் வகுப்பு (வரிசைக்கு நான்கு சீட்கள் ) , எகானமி (வரிசைக்கு ஐந்து சீட்கள்) என ...


Ramesh Sargam
ஜன 17, 2024 00:14

இருக்கும் மற்ற பயணியர் ரயில்களை நன்றாக பழுதுபார்த்து விட்டால், ஏழை ஜனங்களுக்கு மிக மிக ஒத்தாசையாக இருக்கும். எல்லோரும் வந்தே பாரத், புல்லட் ரயில்களில் பயணிக்கும் அளவுக்கு செல்வந்தர்கள் அல்ல.


g.s,rajan
ஜன 16, 2024 21:27

ஆமா இந்த புல்லட் ரயில் தண்ணீரில் போகுமா.... இல்லை தண்ணீரில் மிதக்குமா ...???தண்ணீரில் மூழ்கிக் கொண்டு இருக்கும் சென்னைக்கு இது சரிப்பட்டு வருமா ...???


vadivelu
ஜன 17, 2024 09:41

எப்படி போகும், எந்த வழியில் போகும் என்று தெரியாத சொல்கிறாய்.


g.s,rajan
ஜன 16, 2024 21:22

ராஜகோபால் U.S.A , அவர்களின் தெளிவான விளக்கம் அருமை,இந்தியா ஒரு ஏழை நாடு ,சும்மா வாயில வடை சுடுவது சுலபம்,குருவி தலையில் பனங்காயை வைப்பது போல இந்தியாவுக்கு இது நிச்சயம் சரிப்பட்டு வராது. .


g.s,rajan
ஜன 16, 2024 20:42

இந்தியாவில் முதலில் மின்மயம் ஆக்கப்பட்ட பகுதிகளில் மும்பை மற்றும் சென்னையைப் போல் அதிக அளவில் மின்சாரத் தொடர்வண்டியை இயக்குங்க,பல மாவட்டங்களில் பயணிகள் பேருந்துகளில் புளிமூட்டைப் பயணம் தான் செய்யறாங்க .இரு சக்கர வாகனங்களின் பெருக்கமும்,நான்கு சக்கர வாகனங்களின் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ,வாகனங்களை நிறுத்தவே எங்கும் இடம் இல்லை .சுற்றுப்புற சூழலும் பெருமளவில் மாசு படுகிறது விபத்துக்களும் ,உயிர் இழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது வேதனை.எனவே பொதுப்போக்குவரத்தை பெருமளவில் மேம்படுத்த வேண்டும் .பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை ஒருங்கிணைக்க வேண்டும் .


தமிழ்வேள்
ஜன 16, 2024 20:42

பிராஜெக்ட் யூனிகேஜ் என்று நாடு முழுவதும் ஒரே மாதிரியான பிராட்கேஜ் லைன் போட்டு பின்னர் ஏன் ஸ்டாண்டர்ட் கேஜ் தற்போது அமைக்க வேண்டும்?


Rajagopal
ஜன 16, 2024 20:17

இது ஒரு திமிங்கலம். இதை இயக்குவதற்கு மின்சார சக்தி மிகவும் பெரிய அளவில், சாதாரண மின்சார ரயிலை இயக்குவதை விட பல மடங்கு தேவை. எருமைமாடு பானை நீரை வேகமாக விழுங்குவதைப்போல மின்சார சக்தியை இது கிரகிக்கும். இதற்கான ரயில்வே தண்டவாளங்கள் உண்டாக்க மிகவும் உயர்ந்த ரக ஸ்டீல் தேவை. நம் நாட்டில் தயாரிக்க இன்னும் தயாராகவில்லை. ஜெர்மனி, உக்ரைன், ஜப்பான், சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும். இந்த ரயில் அடிக்கடி பழுது பார்க்கப்பட்டு, சீராக ஓட அதிகம் செலவாகும். இது போடும் சத்த அதிர்வால் பல கட்டிடங்கள் விரிசல் ஏற்பட்டு விழும். நம் ஊர் கான்ட்ராக்டர்கள் சிமெண்டை மண்ணின் தரத்தில் கலவை செய்து கட்டிடங்கள் கட்டி பணம் குவித்துள்ளார்கள். அந்த மாதிரி சிமெண்டும், கான்கிரீட்டும் இதன் அதிர்வலைகளைத் தாங்காது. அதற்கென்று மிகவும் விலை உயர்ந்த அதிர்வை கிரகிக்கும் அமைப்புகள் தேவை. இப்போது இருக்கும் ரயில் தண்டவாளங்கள் இதற்கு பயனாகாது. சிக்னல் இயக்கும் நுண்கருவிகள் ஜப்பானிலிருந்து வர வேண்டும். அவர்கள் நம் ஊர் தொழிற்சாலை திறமையை மதிப்பதில்லை. டிக்கெட் விலை பிளேனில் போவதுபோல வானத்தில் இருக்கும். சாதாரண மக்கள் போக வேண்டுமானால், அரசாங்கம் அதில் வரிப்பணத்தால் ஈடு செய்ய வேண்டி வரும். எல்லா சீட்டுகளும் விற்பனை ஆகி, இந்த ரயில்கள் முழுதும் நிறைந்து தினமும் போனால்தான் நஷ்டமில்லாமல் இதை இயக்க முடியும். மழை வெள்ளம் போன்ற சேதங்கள் ஏற்பட்டால் இந்த ரயில்களை மீண்டும் இயக்க பெரும் பணம் தேவைப்படும். அந்தப் பணத்தில் பத்து வந்தே பாரத் ரயில்கள் விடலாம். நம் தெருவிலிருந்து அடுத்த தெருவுக்கு நடந்து போக முடியும். ஆனால் என் வீட்டு வாசலிலிருந்து ஒரு லக்ஸரி பஸ்சில் ஏறி, சென்னைக்கும், திருச்சிக்கு ஆகும் விலைக்கு டிக்கெட் வாங்கி அடுத்த தெருவில் இறங்க வேண்டுமென்றால் கட்டுப்படியாகாது. இந்த ரயில்கள் நமது கலாச்சாரத்துக்கு உகந்தவை அல்ல. நமது மக்கள் எதையும் ஒரே வாரத்தில் குப்பையாக்கும் வல்லமை படைத்தவர்கள். இதைப்போன்ற ரயில்கள் நமக்கு தேவையற்றவை. இதற்கு விமானத்தில் போவது சுலபமாக இருக்கும். ஜப்பான் சிறிய நாடு. பணக்கார நாடு. மக்கள் மிகவும் துப்புரவானவர்கள். சட்டக் கட்டுப்பாடுகளை மதித்து நடப்பவர்கள். இந்த ரயில் அங்கே ஒன்றிரண்டு பாதைகளில்தான் இயங்குகின்றது. சீனா இதில் இறங்கி இப்போது ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நஷ்டத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. நாம் இந்த பணத்தை மற்ற முக்கியமான தேவைகளுக்கு பயன்படுத்தலாம். மேலும் நல்ல எக்ஸ்பிரஸ் ரோடுகள் போடலாம். பல துறைமுகங்களை தூர்வாரி ஆழப்படுத்தி, பெரிய கப்பல்கள் வரும்படி செய்யலாம். இது ஒரு பெரிய வீண் முயற்சி. மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் நடுவில் இந்த ரயில்பாதை வேண்டுமானால் பணம் லாபத்தில் வரும்படி ஓடலாம். அங்கே பணக்காரர்கள் அதிகம். இது ஒரு தேவையற்ற முயற்சி. நாம் இப்போது இதற்கு தயாராக இல்லை.


Raja
ஜன 16, 2024 21:36

தெரியாத விஷயங்களை அடித்து விட கூடாது, தற்போதைய யுகத்தில் தகவல்கள் மிகவும் முக்கியமானவை. ஒரு நிமிட கூகுல் தேடலில், சீனாவின் புள்ளட் ரயில் லாபத்தில் இயங்குகின்றன என்று வருகிறது. "net profit of the high-speed rail tem to be approximately $378 billion " ஒரு உள்நாட்டு(சர்வதேச விமானங்களை விட அளவில் சிறியவை) விமானத்தில், சராசரியாக நூறு பேர் மட்டுமே பயணிக்க முடியும், ஆனால் புல்லெட் ரயிலில் ஆயிரம் பேர் பயணிக்கலாம். பெட்ரோல் இறக்குமதி செலவை மிச்ச படுத்துகிறது. முதலீடு அதிகம் தேவை, ஆனால் பராமரிப்பு செலவு சாதாரண ரயிலுக்கு ஆகும் செலவு தான். வந்தே பஜரத் ரயில் அறிமுகப்படுத்திய பொது, அதன் சக்கரங்கள் உக்ரையினிலிருந்து இறக்குமதி செய்தோம். இன்று இந்தியாவில் தயாராகிறது. புல்லெட் ரயில் கட்டணம், விமான கட்டணத்திற்கு இணையாக இருக்கும், இப்பொழுது நடுத்தர மக்கள் விமானத்தில் பயணிக்கின்றனர், கார்கள் வைத்துள்ளனர். உழைத்து வரி கட்டுவோர் கொஞ்சம் வசதியாக பயணம் செய்ய உதவும், கால விரயத்தை குறைக்கும்.


A1Suresh
ஜன 16, 2024 20:12

பொருளாதாரத்தில் மூன்றாவது ஆவது பெரிய இடத்திற்கு செல்லும் பாரதத்தில் கேவலம் ஒரு புல்லெட் ரயில் கூட இல்லாவிடில் எப்படி ?


g.s,rajan
ஜன 16, 2024 19:34

அந்த ரெண்டு கோடிப் பேரில் ஒரு அதிர்ஷ்டசாலியாக இருந்தால் கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும் ....


g.s,rajan
ஜன 16, 2024 16:20

நமக்கு சோறுதான் முக்கியம் .....


hari
ஜன 16, 2024 16:38

ஒரு வேலைக்கு போனாதான் உனக்கு சோறு ராஜன்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ