உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாரி மீது பஸ் மோதி விபத்து; பெங்களூரு பயணிகள் 20 பேர் காயம்

லாரி மீது பஸ் மோதி விபத்து; பெங்களூரு பயணிகள் 20 பேர் காயம்

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் பெங்களூரு பயணிகள் 20 பேர் காயம் அடைந்தனர்.பெங்களூரில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 60 பக்தர்களுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னே சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், 20 பேர் காயம் அடைந்தனர். இதில் 6 பேருக்கு கை, கால்கள் முறிந்து, தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்றும் இந்தியன்
நவ 16, 2025 18:37

ஆச்சரியத்திலும் ஆச்சரியம் இவ்வளவு மோசமாக பஸ் முன்பாகம் உடைந்தும் கூட பயணிகள் வெறும் காயம் தான் அடைந்தனர் இறக்கவில்லை. அப்போ ஐயப்பா தனது பக்தர்களை காப்பாற்றியிருக்கின்றார் என்று தான் சொல்லவேண்டும்


sundarsvpr
நவ 16, 2025 10:44

விபத்து ஏற்படுவது முன்பே ஆண்டவனால் நிர்ணயிக்கப்பட்டது. அதாவது செய்த கர்மா வினையினால் விதிக்கப்பட்டவை இதுதான் விதி. இதனை ஏன் ஆளும் அரசால் முன் கூட்டியே அறியமுடியவில்லை. இந்த திறன் இல்லாத அரசுக்கு யார் ஆண்டால் என்ன?


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 16, 2025 15:45

நாம் செய்த கர்மா வினையே இந்த அரசுதானே , ஐந்து ஆண்டுகள் இப்படி அவஸ்தைப்பட வேண்டும் என்பதுதான் விதி.


புதிய வீடியோ