உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிப்ரவரி 13, 14ல் பஸ் ஊழியர்கள்புதிய ஊதிய ஒப்பந்த பேச்சு

பிப்ரவரி 13, 14ல் பஸ் ஊழியர்கள்புதிய ஊதிய ஒப்பந்த பேச்சு

சென்னை:'பஸ் ஊழியர்கள் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சு அடுத்த மாதம் 13, 14ம் தேதிகளில் நடக்கும்' என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில், 1.11 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சு, கடந்த ஆண்டு ஆக., 27-ல் நடந்தது. இரண்டாம்கட்ட பேச்சு, டிச. 27, 28ம் தேதிகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக, அந்த பேச்சு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சு, பிப்., 13, 14ம் தேதிகளில் நடக்க உள்ளது என, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ