மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்
10-Jul-2025
சென்னை:ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ஜியோ பி.சி., எனும் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய, 'க்ளவுட்' கணினி வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், 50,000 ரூபாய் கொடுத்து வாங்கும் கணினியில் இருக்கும் சிறப்பம்சங்கள் அனைத்தையும் பெற இயலும். இதற்கான கட்டணம், மாதம் 400 ரூபாயில் இருந்து துவங்குகிறது. இதை பயன்படுத்த, ஜியோவின் இணையதள 'செட்டாப் பாக்ஸ்' இருந்தால் போதும். அதில் உள்ள ஜியோ பி.சி., என்ற வசதியை 'க்ளிக்' செய்து, கணினியாக பயன்படுத்த முடியும். இதன் வழியே, 'டிவி'யை ஸ்மார்ட் கணினியாக மாற்றும் வசதி உள்ளது. படங்களை எடிட் செய்யும் அடோப் உட்பட, பல்வேறு மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. கூடுதல் விபரங்களை www.jio.com/jiopc இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
10-Jul-2025