உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

கூடலுார்: கூடலுாரில் விசாரணைக்கு ஆஜராக, திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து கூடலுார் கோர்ட் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், கூடலுார் ஓவேலி பகுதியில், 2017ல் நடந்த நகை திருட்டு தொடர்பாக அப்போதைய நியூஹோப் இன்ஸ்பெக்டர் (பொ) சக்திவேல், வழக்கு பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்தார். இவர் தற்போது திருப்பூரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராக வேண்டி, பலமுறை அவருக்கு சமன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று கூடலுார் மாஜிஸ்திரேட் கோர்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்ஸ்பெக்டர் சக்திவேல் கோர்ட்டில் ஆஜராக ஆகாததால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் சரவணகுமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ