உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சி டெட் தேர்வு அறிவிப்பு

 சி டெட் தேர்வு அறிவிப்பு

சென்னை: 'மத்திய கல்வி வாரியம் சார்பில், தேசிய ஆசிரியர் தகுதி தேர்வான 'சி டெட்' தேர்வு, செப்., 6ல் நடத்தப்படும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. நாடு முழுதும் பள்ளிகளில் பணியாற்ற, 'சி டெ ட்' எனும் தேசிய ஆசிரியர் தகுதித்தேர்வில், தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இதன்படி, 22வது தேர்வு, வரும் செப்., 6ல் நாடு முழுதும் 132 நகரங்களில், 27 மொழிகளில் நடத்தப்படும் என, சி.பி.எஸ்.இ., எனும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு எழுத விரும்புவோர், அடுத்த மாதம் 10ம் தேதி வரை, 'https://ctet.nic.in' மற்றும் 'https://www.cbse.gov.in' எனும் இணைதளங்கள் வாயிலாக விண்ணப்பிக் கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ