மேலும் செய்திகள்
பிப்.,10ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்
03-Feb-2025
ஆக்கிரமிப்பாளர்கள் 86,000 பேருக்கு பட்டா
11-Feb-2025
சென்னை:தமிழக அமைச்சரவை கூட்டத்தில், 7375 கோடி ரூபாய் முதலீடுகளுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தை வரும், 2030க்குள், ஒரு டிரில்லியன் அதாவது, 86 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார மாநிலமாக உருவெடுக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க, பல்வேறு நிறுவனங்களுடன், தமிழக அரசு பேச்சு நடத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், துாத்துக்குடி, திருச்சி, வேலுார், பெரம்பலுார் மாவட்டங்களில், 7375 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதில், உலகளாவிய திறன் மையங்கள், தோல் அல்லாத காலணி, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட தொழில்கள் இடம் பெறுகின்றன. இதனால், 19,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
03-Feb-2025
11-Feb-2025