புத்தாக்க திட்டங்களை உருவாக்க அழைப்பு
அண்ணா பல்கலையின் ஆராய்ச்சி நிதியுதவி மற்றும் ஆலோசனை மையம், இன்ஜினியரிங் மாணவர்கள், புத்தாக்க திட்டங்களை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளது. முன்மாதிரியான முயற்சி களை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, 25,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மாணவர்கள், தங்கள் கருத்துருவை, செப்., 3க்குள் வழங்க வேண்டும் என, அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது.