மேலும் செய்திகள்
களை கட்டும் மரவள்ளி கிழங்கு விற்பனை சீசன்
03-Nov-2024
சென்னை : சர்வதேச கால் பந்தாட்ட பயிற்சியாளர் ரிச்சர்ட் டோவாவுக்கு, எம்.ஜி.எம்., மலர் அடையாறு மருத்துவமனையில், முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இது குறித்து, மருத்துவமனையின் எலும்பியல் துறை முதுநிலை நிபுணர் நந்தகுமார் சுந்தரம் கூறியதாவது:கேமரூன் நாட்டைச் சேர்ந்தவர் சர்வதேச கால் பந்தாட்ட வீரர், ரிச்சர்ட் டோவா, 54. இவர் கேரளா அணி மற்றும் சர்வதேச கால்பந்து அணிகளின் பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார்.ஆறு மாதங்களுக்கு முன், கடுமையான முழங்கால் வலியுடன், மருத்துவமனைக்கு வந்தார். முழங்கால் உருக்குலைவு காரணமாக, நடக்க சிரமப்பபட்டார்.எனவே, அறுவை சிகிச்சையில் சேதமடைந்த திசு மற்றும் எலும்பு வளர்ச்சியை அகற்றி, தொடை மற்றும் கெண்டைக்கால் எலும்புகளை, செயற்கை முறையில் வடிவமைத்து, முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, அவர் இயல்பாக நடக்கும் திறனை பெற்றுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
03-Nov-2024