விசாரணை கமிஷனை வழி நடத்தலாமா?
கரூர் தமிழக வெற்றிக்கழக பிரசாரத்தில் 41 பேர் பலியானதற்கு பின், 'ஒரு நபர் விசாரணைக்குழு அமைத்துள்ளோம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம்' என்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதேநேரம் அதிகாரிகள் அரசு நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கெல்லாம் மேலாக முன்னாள் அமைச்சரான செந்தில்பாலாஜி பதற்றத்துடன் கருத்து தெரிவிக்கிறார். இவர்கள் கருத்துப்படியே விசாரணை கமிஷனையும், அரசுக்கு சாதகமாக வழி நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் வந்துள்ளது. அதிகாரிகளின் விளக்கங்கள் விசாரணை கமிஷனின் நடுநிலையை கேள்விக்குறியாக்கி உள்ளது. - உதயகுமார் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,